South Africa vs Sri Lanka: 83 பந்துகளில் முடிந்த இலங்கை இன்னிங்ஸ்.. 42 ரன்களுக்குள் ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபாரம்!
SA vs SL 1st Test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 13.5 ஓவர்களில் அதாவது 83 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் ஆட்டமிழந்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்தது.
இலங்கை அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் மழையால் பாதிக்கப்பட்டதால் 20.4 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இதன் பின்னர் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 42 ரன்களுக்குள் சுருண்டனர். முன்னதாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. அப்போது, இலங்கை அணி வெறும் 71 ரன்களில் ஆட்டமிழந்தது.
42 ரன்களுக்குள் ஆல் அவுட்:
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களின் தாக்குதலால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 13.5 ஓவர்களில் 42 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மார்கோ ஜான்சன் வெறும் 6.5 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 7 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஹக் ட்ரம்பிளுக்கு பிறகு, இந்த சாதனையை செய்த இரண்டாவது பந்துவீச்சாளர் யான்சன் மட்டுமே. கடந்த 1904ம் ஆண்டு ஹக் ட்ரம்பிள் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார். மேலும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாரா 1 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்களும், லஹிரு குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் என்ற இரட்டை இலக்க ரன்களை எடுத்திருந்தனர். இலங்கை அணியின் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
83 balls played by the SL for getting Allout is the lowest in last 100 years and Second lowest overall (75 balls by SA vs Eng is the lowest in June, 1924).”#SAvSL #SLvsSA #SAvSL pic.twitter.com/7FgI7JjAdr
— Chandan Yadav (@Chandanmgs123) November 28, 2024
மிக குறைந்த பந்துகளில் ஆல் அவுட்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 13.5 ஓவர்களில் அதாவது 83 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் ஆட்டமிழந்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்தது. இதற்கு முன்பு 1924-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் தென்னாப்பிரிக்கா 75 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
ALSO READ: Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!
அசத்திய தென்னாப்பிரிக்கா:
இலங்கை அணி குறைந்த பந்துகளில் ஆட்டமிழந்ததோடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1994ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 71 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்தவகையில், இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். மறுபுறம், தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஒரு எதிரணியை இவ்வளவு குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், கடந்த 2013ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணியை 45 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்திருந்தது.
An unwanted record for Sri Lanka in Durban 😯
More ➡ https://t.co/nmvG0u9ddO#SAvSL | #WTC25 pic.twitter.com/PBl2N6L2wo
— ICC (@ICC) November 29, 2024
21ம் நூற்றாண்டில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி விவரம்:
- இந்தியா – 36 ரன்களுக்குள் ஆல் அவுட் (எதிரணி – ஆஸ்திரேலியா 2020 )
- அயர்லாந்து – 38 ரன்களுக்குள் ஆல் அவுட் (எதிரணி – இங்கிலாந்து 2019 )
- இலங்கை – 42 ரன்களுக்குள் ஆல் அவுட் (எதிரணி – தென்னாப்பிரிக்கா 2024 )
- வங்கதேசம் – 43 ரன்களுக்குள் ஆல் அவுட் (எதிரணி – வெஸ்ட் இண்டீஸ் 2018 )
- நியூசிலாந்து – 45 ரன்களுக்குள் ஆல் அவுட் (எதிரணி – தென்னாப்பிரிக்கா 2013 )