Watch Video: சச்சினை கண்டதும் சந்தோஷம்.. உடல்நிலை சரியில்லாத போதும் நாற்காலியில் துள்ளிய காம்ப்ளி..!
Sachin Tendulkar Vinod Kambli Meet: மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் அச்ரேக்கர் நினைவிடத்தை சச்சின், காம்ப்ளி மற்றும் பலர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவும் கலந்து கொண்டார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி இடையேயான நட்பு பற்றிய கதைகள் நம் சிறுவயது முதலே மிகவும் பிரபலமானவை. இந்திய கிரிக்கெட்டில் இரண்டு வீரர்களின் நட்புக்கு உதாரணம் என்றால் சச்சினையும், காம்ப்ளியையும் சொல்லலாம். இருவரும் கிரிக்கெட்டின் நுணக்கங்களை தங்களது குருவான ரமாகாந்த் அச்ரேக்கரிடம் கற்றுகொண்டனர். பள்ளி, உள்நாட்டு கிரிக்கெட் என தொடங்கிய இவர்களது நட்பு, சர்வதேச கிரிக்கெட் வரை தொடர்ந்தது. சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட தொடங்க, காம்ப்ளி தவறான பழக்கவழக்கங்களால் கிரிக்கெட் வாழ்க்கையை இழக்க தொடங்கினார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் தனக்கு ஆதரவாக இல்லை என்று காம்ப்ளி ஒருமுறை தெரிவித்திருந்தார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில், சச்சின், காம்ப்ளி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இது மீண்டும் இவர்களின் நட்பை பற்றி பெருமிதம் கொள்ள வைக்கிறது.
சச்சின் – காம்ப்ளி காம்போ:
மும்பையில் நடந்த புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கரும், காம்ப்ளியும் சந்தித்தனர். சச்சின் மேடைக்கு வந்தவிடனேயே அதிர்ச்சியுடனும், பலவீனமாகவும் இருந்த காம்ப்ளியை கண்டு கலங்கினார். அப்போது திடீரென சச்சின் டெண்டுல்கரை பார்த்த காம்ப்ளி, தனது பால்ய நண்பனை பார்த்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். காம்ப்ளி எழுந்து நின்று சச்சினை சந்திக்க முயற்சி செய்தார், ஆனால், பலவீனம் காரணமாக முடியவில்லை. தொடர்ந்து, நாற்காலியில் அமர்ந்திருக்கும் காம்ப்ளியுடன் சச்சின் கைகளை குழுக்கினார். காம்ப்ளி தனது நண்பர் சச்சினை இழுத்து அருகில் உட்கார முயற்சி செய்தார். இதன்போது சச்சின் காம்ப்ளியிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
சந்திப்பு ஏன்..?
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் அச்ரேக்கர் நினைவிடத்தை சச்சின், காம்ப்ளி மற்றும் பலர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவும் கலந்து கொண்டார்.
காம்ப்ளிக்கு என்ன ஆனது..?
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். வினோத் காம்ப்ளிக்கு முதன்முதலாக கடந்த 2010ம் ஆண்டின் முற்பகுதியில் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு செம்பூரில் இருந்து பாந்த்ராவுக்கு செல்லும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்பு, 2012ம் ஆண்டு அவருக்கு இரண்டு அடைப்புகள் ஏற்பட்டதன் காரணமாக தமனிகளில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காம்ப்ளி நடக்க முடியாமல் சிரமப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
ALSO READ: Mithali Raj: திருமணத்தை நிறுத்தியது ஏன்..? சுவாரஸ்ய கதையை சொன்ன மிதாலி ராஜ்!
வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
18th Jan 1993, Jaipur@vinodkambli349 scored his first ODI century on his birthday as he made 100 Not Out v England. He was involved in an unbroken 164 run partnership with none other than @sachin_rt who scored 82*(81).
Sachin’s knock I had already posted, here’s Kambli’s ton. pic.twitter.com/ANoGht1lBu
— Mainak Sinha🏏📽️ (@cric_archivist) August 21, 2020
1991ம் ஆண்டு வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக அறிமுகமானார் காம்ப்ளி. ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினார். வினோத் காம்பிளி இந்தியாவுக்காக இதுவரை 104 ஒருநாள் போட்டி, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 32.59 சராசரியில் 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் உள்பட 2477 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.20 சராசரியில் 4 சதங்கள், 3 அரைசதங்களுடன் 1084 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் காம்ப்ளி தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்துள்ளார். 129 முதல் தர போட்டிகளில் 59.67 சராசரியில் 35 சதங்கள், 44 அரைசதங்கள் உள்பட 9965 ரன்கள் எடுத்துள்ளார்.