சத்தத்தை குறைக்கச் சொன்ன சச்சின் பக்கத்துவீட்டுக்காரர்.. விளம்பரம் தேடும் முயற்சி என நெட்டிசன்கள் சாடல்..!
சச்சின் டெண்டுல்கரின் பக்கத்து வீட்டுக்காரர் எக்ஸ் தளத்தில், உங்கள் வீட்டில் இருந்து வரும் பலத்த கட்டுமான சத்தம் வருகிறது என்று சமூக வலைதளம் மூலம் சச்சினை டேக் செய்து புகார் அளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் பக்கத்து வீட்டுக்காரர்: திலீப் டிசோசா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது. அவரது பதிவில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ”பாந்த்ரா” வீட்டில் இருந்து பலத்த கட்டுமான சத்தம் வருவதாக சச்சினிடமே சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார்.
Dear @sachin_rt, it’s nearly 9pm and the cement mixer that’s been outside your Bandra home all day making a loud noise is still there, still making a loud noise.
Please could you ask the people working on your home to stick to reasonable hours? Thank you so much.— Dilip D’Souza (@DeathEndsFun) May 5, 2024
சச்சின் டெண்டுலகரின் பக்கத்து வீட்டுக்காரரான திலீப் டிசோசா எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு நபர் டெண்டுல்கருடன் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை. மும்பையில் உள்ள டெண்டுல்கரின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு பயன்படுத்தப்படும் சிமென்ட் கலவை இயந்திரத்திலிருந்து பலத்த சத்தம் வருவதால் எங்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாக பதிவிட்டுள்ளார். மேலும், இரவு 9 மணி ஆகிவிட்டது, உங்கள் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நாள் முழுவதும் பலத்த சத்தம் எழுப்பிய சிமென்ட் கலவை இன்னும் இயங்குகிறது, இன்னும் பெரிய சத்தம் எழுப்புகிறது. தயவுசெய்து உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை நியாயமான நேரத்தை கடைபிடிக்கச் சொல்ல முடியுமா? மிக்க நன்றி” என்று திலீப் பதிவிட்டுள்ளார்.
Also Read: ஐபிஎல் 2024: ப்ளேயிங் லெவனில் தோனி தேவையில்லை – ஹர்பஜன் சிங் காட்டம்
இந்த பதிவை கண்ட சச்சின் ரசிகர்கள் சத்தம் வருகிறது என்றால் காவல்துறையை நாடுங்கள், அதைவிடுத்து நேரடியாக சச்சினை குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி வருகின்றனர். மேலும், ஒருவர் மும்பை போலீஸ் அல்லது பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அனுக வேண்டும், அதை விடுத்து உங்களை பிரபலப்படுத்திக்கொள்ள உங்களது பக்கத்து வீட்டுக்காரரை சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளீர்கள். அனுதாபம் காட்டவில்லை. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவரை விமர்சித்து பலர் பதிலளித்தனர், மேலும் டெண்டுல்கரை பகிரங்கமாகக் குறிப்பதற்குப் பதிலாக அவர் இந்த விஷயத்தை மும்பை காவல்துறைக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்த பதிவு தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.