5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: என்னை நம்புங்கள்! இட்ஸ் அவுட்.. ரோஹித் சர்மாவிடம் வாதிட்ட சர்பராஸ் கான்..!

Sarfaraz Khan: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் யங், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார்.

Watch Video: என்னை நம்புங்கள்! இட்ஸ் அவுட்.. ரோஹித் சர்மாவிடம் வாதிட்ட சர்பராஸ் கான்..!
சர்பராஸ் கான் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Oct 2024 18:47 PM

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று காலையில் புனேவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்திருந்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.

ALSO READ: IND vs NZ: முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள்.. சுழலால் நியூசிலாந்து சுருட்டிய வாஷிங்டன் சுந்தர்!

ரோஹித்திடம் தன்னை நம்ப சொன்ன சர்பராஸ்:

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் யங், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார். ஆனால், இதை முதலில் கேட்ச் என்றே ரிஷப் பண்ட் நம்பவில்லை. ஆனால், பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டிங் செய்துகொண்டிந்த சர்பராஸ் கான் அவுட் என உறுதியாக நம்பினார். தொடர்ந்து, சர்பராஸ் கான் முதலில் அஸ்வினை நோக்கி சென்று மேல்முறையீடு செய்யும்படி கூறினார். பின்னர் நேரடியா ஓடி வந்தது பண்ட்டிடம் சர்பராஸ் கான் வாதிட்டார்.

இந்த இரண்டும் வேலைக்கு ஆகாத நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் சென்று சர்பராஸ் கான் விவாதிக்க தொடங்கினார். தொடர்ந்து, சர்பராஸ் கான் டி.ஆர்.எஸ் எடுக்குமாறு கேப்டன் ரோஹித் சர்மாவிடம் முறையிட்டார். உடனே, அங்கே வந்த விராட் கோலி டி.ஆர்.எஸ் எடுக்க ரோஹித்திடம் வலியுறுத்தினார். பின்னர் டிஆர்எஸ் எடுக்க ரோஹித் முடிவு செய்தார். மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை பார்த்தபோது, ​​பந்து மட்டையின் விளிம்பை எடுத்து பண்ட் கைகளுக்கு சென்று கேட்ச் ஆனது. இதன் மூலம் இந்தியாவின் ரிவியூ வெற்றியடைந்து யங் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால், சக இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்திய அஸ்வின், கேட்ச் பிடித்த ரிஷப் பண்ட் மற்றும் டி.ஆர்.எஸ் எடுக்க சொன்ன சர்பராஸ் கானை பாராட்டினர்.

ALSO READ: KL Rahul Dropped: கம்பீர் கொடுத்த ஆதரவு எங்கே..? 12 மணிநேரத்தில் நீக்கப்பட்ட கே.எல்.ராகுல்!

தந்தையான சர்பராஸ் கான்:

பெங்களூருவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 21ம் தேதி சர்பராஸ் கானுக்கும், அவரது மனைவி ரோமானா ஜாஹூருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சர்பராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்பராஸ் கானுக்கும், ரோமானா ஜாஹூருக்கும் திருமணம் நடந்தது.

நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன் மும்பை அணிக்காக இரானி கோப்பையில் விளையாடிய சர்பராஸ் கான், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ’ரூர்க்.

Latest News