5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SCO vs AUS: ஸ்காட்லாந்தை ஆட்டம் காண வைத்த ஆஸ்திரேலியா! 9.4 ஓவர்களில் இலக்கை விரட்டி அசத்தல்!

Travis Head: ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து இடையே முதல்முறையாக இருதரப்பு தொடர் நடக்கிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

SCO vs AUS: ஸ்காட்லாந்தை ஆட்டம் காண வைத்த ஆஸ்திரேலியா! 9.4 ஓவர்களில் இலக்கை விரட்டி அசத்தல்!
ஆஸ்திரேலிய அணி (Image: -Mark Scates/SNS Group via Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Sep 2024 14:39 PM

ஆஸ்திரேலியா: டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தது. அதன்பிறகு, அந்த அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து இடையே முதல்முறையாக இருதரப்பு தொடர் நடக்கிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

போட்டியில் என்ன நடந்தது..?

ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஒல்லி ஹாரிஸ் மற்றும் ஜார்ஜ் முன்சி களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத ஒல்லி ஹாரிஸ் 6 ரன்களில் வெளியேற, ஜார்ஜ் முன்சி 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னாடி வந்த பிரேண்டன் மக்முல்லன் 15 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் பெரிங்டன் 23 ரன்கள் வெளியேறினார். விக்கெட் கீப்பர் மேத்யூ க்ராஸ் ஸ்காட்லாந்து அணியில் ஓரளவு நிலைத்து நின்று, 27 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் அபோட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், ஜாம்பா மற்றும் சேவியர் தலா 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.

ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்:

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் தனது முதல் டி20 போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதற்கு பிறகு, டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் கூட்டணி ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்களை கதறவிட்டது. கிடைக்கும் பந்துகளை எல்லாம் இருவரும் நாலாபுறமும் பறக்கவிட, பவர்பிளே முடிவில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் அடித்தது. டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேயில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இதுவாக அமைந்தது.

ALSO READ: Paralympic 2024: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.. பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று புதிய சாதனை!

இதன்மூலம், தென்னாப்பிரிக்காவின் பழைய உலக சாதனையை ஆஸ்திரேலிய அணி முறியடுத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பவர்பிளேவில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பவர்பிளேக்கு பிறகு முதல் பந்திலேயே மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். இருப்பினும், டிராவிஸ் ஹெட் அதிரடி பேட்டிங்கை குறைக்கவே இல்லை. இதன்மூலம், ஹெட் டி20 சர்வதேச போட்டிகளில் அதிவேக சதம் அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

ஹெட் அவுட்டாவதற்கு முன், ஹெட் 25 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 80 ரன்கள் குவித்தார். இறுதியில் ஜோஷ் இங்கிலிஷ் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 5 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 8 ரன்களும் அடித்த நிலையில் 9.4 ஓவர்களில் 155 ரன்களை விரட்டி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்காட்லாந்துக்கு மோசமான நாள்:

முதலில் டாஸை இழந்த ஸ்காட்லாந்து அடுத்ததாக பேட்டிங் செய்தது. பேட்டிங்கிலும் அந்த அணியால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்கவில்லை. சிலருக்கு தொடக்கங்கள் கிடைத்தாலும் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. அந்த அணியில் அதிகபட்சமான ஜார்ஜ் முன்சி 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.

Latest News