SCO vs OMN: அறிமுக போட்டியில் 7 விக்கெட்கள்.. உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்! - Tamil News | SCO vs OMN Charlie Cassell's record breaking seven for on debut | TV9 Tamil

SCO vs OMN: அறிமுக போட்டியில் 7 விக்கெட்கள்.. உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்!

Published: 

23 Jul 2024 12:00 PM

Charlie Cassell : தான் வீசிய முதல் போட்டியின் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை சார்லி படைத்துள்ளார். அறிமுக போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 32வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். சார்லி கேஸ்டலுக்கு முன், உலகில் 31 பந்துவீச்சாளர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர்.

SCO vs OMN: அறிமுக போட்டியில் 7 விக்கெட்கள்.. உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்!

Charlie Cassell

Follow Us On

அறிமுக போட்டியில் அதிக விக்கெட்கள்: ஸ்காட்லாந்தின் ஃபோர்தில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் ஸ்காட்லாந்து அணிக்காக களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் சார்லி கேசில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு பந்துவீச்சாளர்கள் செய்ய முடியாத அரிய சாதனையை படைத்துள்ளார். சார்லி கேசில் தனது அறிமுக போட்டியிலேயே 5.4 ஓவர்கள் மட்டுமே வீசி ஒரு மெய்டன் ஓவர் உட்பட 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். சார்லி கேசிலுக்கு முன், உலகில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் தனது அறிமுகப் போட்டியில், எந்த பந்துவீச்சாளரும் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது.

Also read: IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

ரபாடா சாதனையை முறியடித்த சார்லி கேசில்:

சார்லி கேசிலுக்கு முன், ஒருநாள் அறிமுக போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா படைத்திருந்தார். ரபாடா கடந்த 2015ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 16 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அரங்கில் அறிமுகமானார். தற்போது அந்த சாதனையை ஸ்காட்லாந்தின் சார்லி சார்லி கேஸெல் முறியடித்துள்ளார்.

உலகின் 32வது பந்துவீச்சாளர் என்ற சாதனை:

சார்லி கேசில் வீழ்த்திய ஏழு விக்கெட்டுகளில் முதல் இரண்டு விக்கெட்டுகளும் அவர் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சரிந்தன. இதனுடன், தான் வீசிய முதல் போட்டியின் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை சார்லி படைத்துள்ளார். அறிமுக போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 32வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். சார்லி கேஸ்டலுக்கு முன், உலகில் 31 பந்துவீச்சாளர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர்.

முதல் ஓவரில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சார்லி, அதே ஓவரில் மற்றொரு விக்கெட்களையும் வீழ்த்தி, அந்த ஓவரை மெய்டனாக வீசினார். இதன் மூலம், முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை சார்லி பெற்றார்.

மாற்ற வீரராக களமிறங்கி உலக சாதனை:

முதலில் ஓமனுக்கு எதிரான போட்டிக்கான அணியில் சார்லி கேசில் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்காட்லாந்து அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் சோல் காயம் அடைந்ததால், சார்லி கேசிலுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சார்லி உலக சாதனை படைத்துள்ளார்.

Also read: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

போட்டி சுருக்கம்:

முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, ஸ்காட்லாந்து வேகப்பந்து வீச்சாளர் சார்லி கேசில் வேகத்தை தாக்குதலை தாக்கு பிடிக்காமல், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதனால் ஓமன் அணி வெறும் 21.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 90 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்த இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணி ஆரம்பத்தில் 2 விக்கெட்களை இழந்தாலும், பிரண்டன் மெக்முல்லனின் 37 ரன்களாலும், கேப்டன் ரிச்சி பெரிங்டனின் 24 ரன்களாலும் வெற்றி இலக்கை விரட்டி வெற்றிபெற்றது.

Related Stories
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version