5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Shane Warne Birthday: விக்டோரியா மண்ணின் மைந்தன் டூ ஸ்பின் மன்னன்.. ஷேன் வார்னே கிரிக்கெட்டை ஆண்ட கதை!

Shane Warne: ஷேன் வார்னே தனது கடைசி டெஸ்ட் போட்டியில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங்கின் வலுவான கேப்டன்சியால் அவருக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2008ம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

Shane Warne Birthday: விக்டோரியா மண்ணின் மைந்தன் டூ ஸ்பின் மன்னன்.. ஷேன் வார்னே கிரிக்கெட்டை ஆண்ட கதை!
ஷேன் வார்னே (Image: Mark Dadswell/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 13 Sep 2024 09:53 AM

ஷேன் வார்னே பிறந்தநாள்: ஷேன் வார்னேவுக்கு தனி அறிமுகம் தேவையில்லை என்றே சொல்லலாம். உலகின் தலைசிறந்த சுழற்பந்து விச்சாளர் ஷேன் வார்னேவின் பிறந்தநாள் இன்று. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், ஸ்பின் மன்னன் என்று அழைக்கப்படும் வார்னே, கடந்த 2022ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 13 செப்டம்பர் 1969ம் ஆண்டு விக்டோரியாவில் பிறந்த ஷேன் வார்னே, 4 மார்ச் 2022ம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார். ஷேன் வார்னேவின் முழுப்பெயர் ஷேன் கீத் வார்னே. சிறுவயது முதல் படிப்பில் எவ்வளவு ஆர்வம் இருந்ததோ, அதே அளவு ஆர்வத்தையும் கிரிக்கெட்டில் காட்டினார் வார்னே. மெல்போர்னில் உள்ள மெண்டோன் கிராமர் பள்ளியில் தனது படிப்பை முடித்த வார்னே, அதன் பின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். ஷேன் வார்னே ஹாம்ப்டன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் விளையாட தொடங்கி, பின்னர் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். இங்கிருந்து ஷேன் வார்னேவின் கிரிக்கெட் அத்தியாயம் தொடங்கியது.

ALSO READ: Virat Kohli: 147 ஆண்டுகளில் முதல்முறை.. மிகப்பெரிய சாதனை படைக்கப்போகும் விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்:

1983ம் ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழகத்திற்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற வார்னே, தொடர்ந்து கிளப் போட்டிகளில் முத்திரை பதிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் லெக் ஸ்பின் மட்டுமல்லாது ஆஃப் ஸ்பினையும் போட்டு வந்த வார்னே, பின் நாளில் முழு நேரமாக லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக உருவெடுத்தார். சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பயம் காட்டிய ஷேன் வார்னே, 1992ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். வார்னே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் விக்கெட்டாக ரவி சாஸ்திரியை அவுட் செய்தார். அதை தொடர்ந்து, அடுத்த வருடமான 1993ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஷேன் வார்னே தனது கடைசி டெஸ்ட் போட்டியில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங்கின் வலுவான கேப்டன்சியால் அவருக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2008ம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதன் பிறகு ஷேன் வார்னே நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் வேட்டை:

16 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஷேன் வார்னே, 339 சர்வதேச போட்டிகளில் 1001 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 708 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னே, டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இலங்கை சுழற்பந்து விச்சாளர் முத்தையா முரளிதரன் 495 சர்வதேச போட்டிகலில் 1347 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ள ஷேன் வார்னே டெஸ்டில் 3154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 1018 ரன்களும், ஐபிஎல்லில் 198 ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் சாதனை:

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் வார்னே ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்ன் (708 விக்கெட்) இரண்டாவது இடத்தில் உள்ளார். இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே, 71 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது சிறந்த சாதனையாக வைத்துள்ளார். 38 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளையும், 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: IND vs BAN: விரைவில் இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடர்.. பல சாதனைகளை கோலி, அஸ்வின் முறியடிக்க வாய்ப்பு!

ஓய்வு:

ஷேன் வார்ன் தனது டெஸ்ட் வாழ்க்கையை 1992 இல் சிட்னி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தொடங்கி ஜாம்பவான உருவெடுத்தார். அதன்பின், இங்கிலாந்தில் நடைபெற்ற 2006-07 ஆஷஸ் தொடரில், வார்னே தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் 145வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு தனது ஓய்வை அறிவித்தார்.

Latest News