5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Don Bradman Cap: டான் பிராட்மேனின் பழைய பேகி தொப்பி.. பத்து நிமிடத்தில் ரூ.2.63 கோடிக்கு ஏலம்..!

Sir Don Bradman: கிரிக்கெட் உலகில் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக டான் பிராட்மேனின் தொப்பியும் மாறியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் கடைசியாக இந்த பேக்கி தொப்பியை அணிந்திருந்தார்.

Don Bradman Cap: டான் பிராட்மேனின் பழைய பேகி தொப்பி.. பத்து நிமிடத்தில் ரூ.2.63 கோடிக்கு ஏலம்..!
டான் பிராட்மேன் தொப்பி (Image: ICC and Twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 04 Dec 2024 18:11 PM

சர் டான் பிராட்மேன் எல்லா காலத்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறது. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கராக இருந்தாலும், சச்சினே கிரிக்கெட்டில் கடவுளாக பார்த்தது சர் டான் பிராட்மேனைதான். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் தனது பேட் மூலம் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். இவர் கிரிக்கெட்டிற்காக படைத்த சாதனைகள் ஏராளம். அப்படி இருக்க, சர் டான் பிராட்மேனை தொடர்ந்து, அவர் அணிந்திருந்த ஒரு தொப்பியும் தற்போது சாதனை படைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், அதுதான் உண்மை.

ALSO READ: Watch Video: மலைவாழ் மக்களுடன் நடனமாடிய தோனி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

அப்படி என்ன சாதனை..?

பிராட்மேனின் பேகி தொப்பியானது நேற்று சிட்னியில் ஏலத்தில் விடப்பட்டது. வெறும் 10 நிமிடங்களில், பிராட்மேனின் தொப்பி ஏலத்தில் கோடிக்கணக்கில் விலை போனது. இதன்மூலம் கிரிக்கெட் உலகில் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக டான் பிராட்மேனின் தொப்பியும் மாறியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் கடைசியாக இந்த பேகி தொப்பியை அணிந்திருந்தார்.

ரூ. 2.63 கோடிக்கு ஏலம்:

செவ்வாய்க்கிழமையான நேற்று டான் பிராட்மேனின் ‘பேகி கிரீன் கேப்’ ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஏலம் விடப்பட்டது. ஏலம் தொடங்கிய பந்து நிமிடத்தில் இந்த தொப்பி இது 4,79,700 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு வாங்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ.2.63 கோடியாகும். பிராட்மேன் அணிந்திருந்த இந்த தொப்பி சுமார் 80 வயது பழையது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 77 ஆண்டுகளுக்கு முன்பு சர் டான் பிராட்மேன் இதை அணிந்திருந்தார். 1947-48ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. ஆஸ்திரேலியாவில் பிராட்மேனின் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும். இதற்கு பிறகு, பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த தொடருக்கு பிறகு, இந்த தனித்துவமான தொப்பியை பிராட்மேனே இந்திய டூர் மேலாளர் பங்கஜ் “பீட்டர்” குமார் குப்தாவுக்கு பரிசளித்தார். தற்போது, அந்த தொப்பியை பல கோடிகளில் ஏலம் போனது.

கடைசி தொடரில் கலக்கல்:

1947-48ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் டான் பிராட்மேன் தனது அசாத்திய பேட்டிங் திறமையை வெளிப்படுத்திருந்தார். இந்தியாவிற்கு எதிரான கடைசி 6 இன்னிங்ஸில் 3 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் உள்பட 178.75 என்ற சராசரியில் மொத்தம் 715 ரன்கள் எடுத்திருந்தார்.

ALSO READ: Watch Video: சச்சினை கண்டதும் சந்தோஷம்.. உடல்நிலை சரியில்லாத போதும் நாற்காலியில் துள்ளிய காம்ப்ளி..!

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சர் டான் பிராட்மேன், 2 முச்சதங்கள், 12 இரட்டை சதங்கள், 29 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் உள்பட 6996 ரன்கள் குவித்துள்ளார்.மேலும், இவரது பேட்டிங் சராசரி 99.94 ஆகும். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் சராசரி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் களத்தில் தி டான் என்று அழைக்கப்பட்ட சர் டான் பிராட்மேன் கடந்த 2001ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி தனது 92 வயதில் காலமானார்.

Latest News