SL vs NZ 2nd Test Highlights: வெற்றிக்காக 15 வருட காத்திருப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இலங்கை அணி!
Sri Lanka vs New Zealand: நியூசிலாந்து அணி இலங்கையை தொடர்ந்து அடுத்ததாக இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறது. வருகின்ற அக்டோபர் 16ம் தேதி முதல் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி காலேயில் நடைபெற்றது. இந்த போட்டியில், போட்டியை நடத்தும் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இலங்கை கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. முதல் இன்னிங்ஸில் வெறும் 88 ரன்களுக்கு ரன்களுக்கு ஆல் அவுட்டான நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 360 ரன்களுக்குள் சுருண்டது. இந்த தொடரை சொந்த மைதானத்தில் வெல்வது இலங்கை அணிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
15 ஆண்டுகளுக்கு பிறகு..
காலேயில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதையடுத்து, தற்போது நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதன்மூலம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 15 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கைப்பற்றியது. முன்னதாக, கடந்த 2009ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை 2-0 என தோற்கடித்தது. மேலும், இன்னிங்ஸ் அடிப்படையில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
A thumping win for Sri Lanka in Galle 💪#WTC25 | #SLvNZ 📝: https://t.co/MBQXWEOCeW pic.twitter.com/Uo6TmIdocc
— ICC (@ICC) September 29, 2024
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, கமிந்து மெண்டிஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இன்னிங்ஸ் 602 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, ஃபாலோ ஆன் கீழ் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 360 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 78 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 67 ரன்களும், ட்வோன் கான்வே 61 ரன்களும், டாம் ப்ளெண்டெல் 60 ரன்களும் எடுத்திருந்தனர்.
First Test series win for Sri Lanka Vs New Zealand in 15 years.
– Sanath Jayasuriya making things happen for Sri Lankan cricket! pic.twitter.com/3pCVTtXMCD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 29, 2024
இலங்கை அணியில் அதிகபட்சமாக நிஷான் பாரிஸ் 6 விக்கெட்டுகளும், ப்ரபோத் ஜெய்சூர்யா 3 விக்கெட்களும் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவி செய்தனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 185 ரன்களை எடுத்து பல சாதனைகளை படைத்த கமிந்து மெண்டிஸ் போட்டியின் நாயகனாகவும், நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்குள் சுருட்ட முக்கிய காரணமாகவும், 6 விக்கெட்களை வீழ்த்திய ஜெயசூர்யா தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற்றம் கண்ட இலங்கை அணி:
இந்த வெற்றியின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 55.55 புள்ளிகளிடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மறுபுறம், தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டிரா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி இலங்கையை தொடர்ந்து அடுத்ததாக இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறது. வருகின்ற அக்டோபர் 16ம் தேதி முதல் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.