Paris Olympics 2024: ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிறிய நாடு எது தெரியுமா..? மக்கள் தொகை 34 ஆயிரம் மட்டுமே..!
Olympics 2024: 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் 117 இந்திய வீரர்களும் அடங்கும்.முன்னதாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி 7 பதக்கங்களை வென்றிருந்தது. ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறிய நாடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறிய நாடு: பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை அதாவது ஜூலை 26ம் தேதி நடைபெறவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 அன்று முடிவடைகிறது. பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வரும் சூழலில், தற்போது அனைவரது பார்வையும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது மீதே உள்ளது. ஒலிம்பிக் போட்டியையொட்டி ஏற்கனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் 117 இந்திய வீரர்களும் அடங்கும்.முன்னதாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி 7 பதக்கங்களை வென்றிருந்தது. ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறிய நாடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் உலகையே அதிர வைத்த சான் மரினோ:
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறிய நாடு என்ற பெருமையை சான் மரினோ என்ற நாடு பெற்றுள்ளது. சான் மரினோ இத்தாலியின் நடுவில் ஒரு மலையைச் சுற்றி அமைந்துள்ள நாடாகும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உலகின் மிகச்சிறிய நாடான சான் மரினோவில் 34 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். இந்த நாட்டின் பரப்பளவு 61 சதுர கிலோமீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சான் மரினோ கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. இதில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சான் மரினோ டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு ஐந்து வீரர்களை மட்டுமே அனுப்பி இருந்தது. வெறும் 5 வீரர்களை மட்டுமே அனுப்பி 3 பதக்கங்களை வென்று உலக நாடுகளை தன் பக்கம் கவனம் ஈர்க்க செய்தது.
இருப்பினும், சான் மரினோ நாடு ஒலிம்பிக்கில் பங்கேற்றதற்கான மிகப் பழைய வரலாற்றைக் கொண்டுள்ளது. சான் மரினோ முதன்முதலில் கடந்த 1960ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. அதன் பின்னர் அந்த நாட்டில் இருந்து ஒன்பது வீரர்கள் சைக்கிள் ஓட்டுதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர். ஆனால் எந்தப் பதக்கமும் வெல்ல முடியவில்லை. டோக்கியோ ஒலிம்பிக் 2020ம் ஆண்டு சான் மரினோவின் மைல்ஸ் அமீன், இந்தியாவின் தீபக் புனியாவை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடுகள்:
முன்னதாக டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பெர்முடாவின் ஃப்ளோரா டஃபி. இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடு என்ற பெருமையை பெர்முடா பெற்றது. 62,034 மக்கள் தொகையைக் கொண்ட பெர்முடாவுக்கு இது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகும்.
ஒலிம்பிக்கில் இதுவரை 5 சிறிய நாடுகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. 637,177 மக்கள்தொகை கொண்ட லக்சம்பர்க், 1952 ம் ஆண்டு ஆண்களுக்கான 1500 இல் தங்கப் பதக்கத்தை வென்றது. 607,600 மக்கள்தொகை கொண்ட தென் அமெரிக்காவில் உள்ள சுரினாம், 1988 ம் ஆண்டு ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்றது. 381,200 மக்கள்தொகை கொண்ட பஹாமாஸ் 1964 ம் ஆண்டு படகு ஓட்டுதல் போட்டில் தங்கம் வென்றது. மேலும் 113,084 மக்கள்தொகை கொண்ட கரீபியிலுள்ள கிரெனடா, 2012 ம் ஆண்டு ஆண்கள் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றது.