5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SRH vs RR: இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? SRH மற்றும் RR இன்று சேப்பாக்கில் பலப்பரீட்சை..!

Chennai: சேப்பாக் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதிபோட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. எந்த அணி பைனலுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

SRH vs RR: இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது?  SRH மற்றும் RR இன்று சேப்பாக்கில் பலப்பரீட்சை..!
intern
Tamil TV9 | Updated On: 24 May 2024 16:13 PM

நடப்பு 2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2-க்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்றது. இந்நிலையில், குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

Also Read:  Covai: பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் பலி… கோவையில் ஏற்பட்ட சோகம்..!

சன்ரைசர்ஸ் ஐதரபாத் இந்த சீசனில் ஆரம்பம் முதலே பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. டி20 போட்டிகளில் எதிர்பார்க்காத அதிகபட்ச ரன்களை இலக்காக குவித்து உலக சாதனை படைத்துள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் பல போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி எதிர் அணிகளுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில், சேசிங் என்று வரும்பொழுது மிகக்குறைந்த இலக்கை கூட அடிக்க தவறியிருக்கிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ள சன்ரைசர்ஸ் இந்த போட்டியில் வெற்றிபெறுமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read: Naga Chaitanya: தியேட்டரில் சமந்தா நடித்த படம்.. ரசித்து பார்த்த நாக சைதன்யா.. வைரல் வீடியோ!

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் இந்த சீசனின் ஆரம்பத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும், தொடர் வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், லீக் தொடர்களின் மறுபாதியில் தொடர் தோல்விகளை சந்தித்தது. மேலும், நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்சிபி அணியுடனான எலிமினேட்டர் போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ராஜஸ்தான் அணி ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளதால், இறுதிபோட்டிக்கு செல்லும் முனைப்பில் களம் காண உள்ளது. இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஐதராபாத் 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனிலும், ராஜஸ்தான் அணியை சன்ரைசரஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரை மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், இப்போட்டியை காண சென்னை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Latest News