5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SL: சரித் அசலங்கா தலைமையில் களம்.. இந்திய டி20 தொடருக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

Charith Asalanka: இலங்கை டி20 அணியின் கேப்டனாக இருந்த வனிந்து ஹசரங்க, டி20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வியின் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து இலங்கை அணியின் புதிய கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசலங்கா நியமிக்கப்பட்டதன்மூலம், இலங்கை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.

IND vs SL: சரித் அசலங்கா தலைமையில் களம்.. இந்திய டி20 தொடருக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
srilanka cricket
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 23 Jul 2024 14:37 PM

இலங்கை அணி அறிவிப்பு: ஜூலை 27ம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணிக்கு, சரித் அசலங்கா கேப்டனாக செயல்பட இருக்கிறார். முன்னதாக, இலங்கை டி20 அணியின் கேப்டனாக இருந்த வனிந்து ஹசரங்க, டி20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வியின் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து இலங்கை அணியின் புதிய கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசலங்கா நியமிக்கப்பட்டதன்மூலம், இலங்கை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.

ALSO READ: IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

சரித் அசலங்கா ஏன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்..?

சமீபத்தில் முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக்கில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை சரித் அசலங்கா வழிநடத்தினார். அத்துடன் இறுதிப் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி காலி மார்வெல்ஸ் அணியை வீழ்த்தி சம்பியனாகியது. இதையடுத்து, லங்கா பிரீமியர் லீக்கின் வெற்றிகரமான கேப்டனை டி20 அணியின் கேப்டனாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்திருப்பது சிறப்பு. இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடரின் மூலம் கேப்டனாக புதிய இன்னிங்ஸை தொடங்குவார் சரித் அசலங்கா.

மீண்டும் அணியில் சண்டிமால்:

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 34 வயதான தினேஷ் சந்திமாலுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை அணிக்காக சண்டிமால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது லங்கா பிரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்டு தினேஷ் சண்டிமால் மீண்டும் திரும்பியுள்ளார்.

இலங்கை டி20 அணி:

சரித் அசலங்கா (கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹிஷ் திக்ஷான், சமிந்து விக்ரம பசிங்கே, துவன்ஷன, விக்ரம பசிங்கே , துஷ்மந்த சமிர, பினுர பெர்னாண்டோ.

இந்திய டி20 அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷதீப். சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

ALSO READ: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

இந்தியா vs இலங்கை தொடர் அட்டவணை:

  1. முதல் டி20: ஜூலை 27 (பல்லேகலே) –  இந்திய நேரப்படி மாலை 7 மணி
  2. இரண்டாவது டி20: ஜூலை 28 (பல்லேகலே) – இந்திய நேரப்படி மாலை 7 மணி
  3. மூன்றாவது டி20: ஜூலை 30 (பல்லேகலே) – இந்திய நேரப்படி மாலை 7 மணி

Latest News