5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sunil Chhetri Retirement :இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு.. அதிர்ச்சி ரசிகர்கள்.!

Football: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி குவைத் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வுபெறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Sunil Chhetri Retirement :இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு.. அதிர்ச்சி ரசிகர்கள்.!
intern
Tamil TV9 | Updated On: 16 May 2024 15:59 PM

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்த சுனில் சேத்ரி, 12 ஜூன் 2005 அன்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியில் தனது முதல் சர்வதேச கோலையும் அடித்து வரலாற்று சாதானை படைத்தார். சுனில் சேத்ரியின் தந்தை கே.பி.சேத்ரி, தாய் சுசிலா சேத்ரி.இவர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணி புரிந்தவர். சிறுவயது முதல் சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிகப்படியான ஆர்வம் இருந்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை மிகவும் பிடிக்கும் என்று சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் கிர்க்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சுனில் சேத்ரி, பின்னாளில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

குவைத் மற்றும் கத்தாருக்கு எதிரான FIFA உலகக் கோப்பை 2016 மற்றும் AFC ஆசியக் கோப்பை 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஜூன் 6-ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி இரண்டு குரூப் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி ஜூன் 11-ம் தேதி கத்தாரை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

Also Read: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. ஜூலை 10க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்.. காரணம் என்ன?

சுனில் சேத்ரி தான் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதை வீடியோ ஒன்று வெளியிட்டு அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கால்பந்து அணியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் இது. நான் எனது முதல் போட்டியில் விளையாடியது மறக்க முடியாத தருணம், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது முதல் போட்டி, எனது முதல் கோல், இது எனது பயணத்தின் மறக்க முடியாதது. தாய் நாட்டிற்காக இவ்வளவு போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. நான் ஓய்வு பெற முடிவு செய்தபோது, முதலில் பெற்றோரிடமும், மனைவியிடமும் கூறினேன். மேலும், தனது கால்பந்து வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சுனில் சேத்ரி 94 கோல்களை அடித்து 4-வது இடத்தில் உள்ளார். சுனில் சேத்ரி தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் 6 AIFF சிறந்த வீரரருக்கான விருதுகளை பெற்றுள்ளார். மேலும், 2011ல் அர்ஜுனா விருதும், 2019ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.20 ஆண்டுகளாக கால்பந்து உலகில் முத்திரை பதித்து வந்த சுனில் சேத்ரி தனது ஓய்வை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது ஓய்வு இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று கால்பந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest News