Sunil Narine: சூப்பர் ஸ்டார் என்று சுனில் நரைனை பாராட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.. காரணம் என்ன?

Kevin Pietersen: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17 வது சீசனில் மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை பெற்ற சுனில் நரைனை, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் சூப்பர் ஸ்டார் என்று பாராடியுள்ளார். இதற்கு முன்னர் சுனில் நரைன் குறித்து அவர் கூறிய கருத்தை திரும்பபெற்று, இந்த சீசனில், சிறப்பான ஆல்-ரவுண்டராக விளையாடியதற்காக ஆட்டநாயகனாக விருதை வென்ற சுனில் நரைனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Sunil Narine: சூப்பர் ஸ்டார் என்று சுனில் நரைனை பாராட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.. காரணம் என்ன?

சுனில் நரைன், கெவின் பீட்டர்சன்

Published: 

28 May 2024 15:27 PM

சூப்பர் ஸ்டார்: ஐபிஎல் 2024 வது 17 வது சீசனின் இறுதிப்போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வென்று சாதனைப் படைத்துள்ளது. 17 வது சீசன் முழுவதும் சுனில் நரைன் சிறப்பாக செயல்பட்டதற்காக மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை பெற்றுள்ளார். இதற்கு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், இதற்கு முன்னர் சுனில் நரைன் குறித்து அவர் கூறிய கருத்தை திரும்பபெற்றுள்ளார். இந்த சீசனில், சிறப்பான ஆல்-ரவுண்டராக விளையாடியதற்காக ஆட்டநாயகனாக விருதை வென்ற சுனில் நரைனை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

Also Read: PM Modi : 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், இந்த சீசனில் சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க கூடாது என்று வலியுறுத்தினார். கடந்த ஐபிஎல் சீசன்களில் குறைவான ரன்களை மட்டுமே எடுத்துள்ளதாலும், சீசனின் தொடக்கத்தில், கடந்த மூன்று சீசன்களில் அவரது சீரற்ற பேட்டிங் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, நரைன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், அவரது செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக கூறினார். தற்போது கொல்கத்தா அணி ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தான் காரணமாக இருந்த நிலையில், தனது தவறை உணர்ந்த கெவின் பீட்டர்சன், சுனில் நரைனைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டதை ஒப்புக்கொண்டு, தனது முந்தைய கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.

Also Read: KGF பட சிறுவனா இது? ஆளே மாறிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்!

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சுனில் நரைனை பாராட்டி பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், இந்த ஐபிஎல் 2024 சீசனில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் சுனில் நரைனின் செயல்திறனைப் பாராட்டினார். இது ஆச்சரியமாக இருக்கிறது, உண்மையில் அவர் செய்தது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் போட்டியின் தொடக்கத்தில் நான் மிகவும் குரல் கொடுத்த விமர்சகர்களில் நானும் ஒருவராக இருந்தேன். அவரது செயல்பாடுகள் ஆரம்பத்தில் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். அவரது சீரற்ற தன்மையின் காரணமாக அவர் பொதுவாக ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு, பின்னர் வெளியேறி, வேகத்தை சீர்குலைப்பார். ஆரம்பத்தில் அவரது சீரற்ற பேட்டிங் குறித்து சந்தேகம் இருந்தபோதிலும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியில் சுனில் நரைனின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது என்றும், சுனில் நரைன் தான் கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும், அதன் காரணமாக மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை சுனில் நரைன் பெற்றுள்ளார் என்று பாராட்டினார். இந்த சீசனில் சுனில் நரைன் 3 அரைசதம், 17 விக்கெட்டுகள், 1 சதம் உட்பட 488 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருது மற்றும் மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை பெற்றுள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!