5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Suryakumar Yadav: டி20யில் விராட் கோலியை விட வேகம்.. புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

India VS Sri Lanka: சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை விட அதிகவேகமாக விருதுகளை வென்று முதலிடம் பிடித்துள்ளார். அதாவது விராட் கோலியை விட சூர்யகுமார் யாதவ் 56 போட்டிகள் குறைவாக விளையாடி சர்வதேச டி20யில் உலக சாதனையை படைத்துள்ளார். கிங் கோலியின் சாதனையை சமன் செய்து டி20 சர்வதேச கிரிக்கெட்டில் புதிய டான் ஆனார் சூர்யகுமார் யாதவ்.

Suryakumar Yadav: டி20யில் விராட் கோலியை விட வேகம்.. புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 18 Nov 2024 19:02 PM

சூர்யகுமார் யாதவ்: இந்தியா – இலங்கை இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இந்தபோட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அபாரமாக இருந்ததால், இவருக்கு ஆட்டநாயகன் விருது ( பிளேயர் ஆஃப் தி மேட்ச்) கிடைத்தது. இதன்மூலம், சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை விட அதிகவேகமாக விருதுகளை வென்று முதலிடம் பிடித்துள்ளார். அதாவது விராட் கோலியை விட சூர்யகுமார் யாதவ் 56 போட்டிகள் குறைவாக விளையாடி சர்வதேச டி20யில் உலக சாதனையை படைத்துள்ளார். கிங் கோலியின் சாதனையை சமன் செய்து டி20 சர்வதேச கிரிக்கெட்டில் புதிய டான் ஆனார் சூர்யகுமார் யாதவ்.

Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை தூக்கிய சீனா.. முதல் பதக்கம் வென்ற நாடு இதுவா..?

அப்படி என்ன சாதனை..?

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்காக சூர்யாவுக்கு ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது. டி20 சர்வதேசப் போட்டியில் இது அவரது 16வது ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதாகும். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு, ஓய்வுபெற்ற விராட் கோலி இதுவரை டி20 சர்வதேசப் போட்டிகளில் 16 ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ பட்டங்களையும் வென்றுள்ளார். இதன்மூலம், கிங் கோலியை சமன் செய்த சூர்யகுமார் யாதவ், போட்டிகளின் அடிப்படையில், சூர்யா கோலியை பின்தள்ளினார்.

அதாவது, விராட் கோலி 125 போட்டிகளில் 16 ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதுகளை வென்றுள்ளார். அதே சமயம் சூர்யா 69 போட்டிகளில் மட்டுமே 16 ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதுகளை வென்றுள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ பெற்ற வீரர்கள்

16 – சூர்யகுமார் யாதவ் (69 போட்டிகள்)
16 – விராட் கோலி (125 போட்டிகள்)
15 – சிக்கந்தர் ராசா (91 போட்டிகள்)
14- முகமது நபி (129 போட்டிகள்)
14 – ரோஹித் சர்மா (159 போட்டிகள்)
14 – விரந்தீப் சிங் (78 போட்டிகள்).

சர்வதேச டி20 போட்டியில் அதிக பிளேயர் ஆஃப் தி மேட்ச் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் விராட் கோலியை பின்னுக்கு தள்ளுவார் என்பது உறுதி. ஆனால், இந்த சாதனையை ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும் படைக்க அதிக வாய்ப்புள்ளது. ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, இதுவரை 91 டி20 போட்டிகளில் 15 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 129 டி20 போட்டிகளில் 14 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மலேசியன் வீரர் விரந்தீப் சிங் இதுவரை 78 டி20 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். எனவே, இவர்களும் அடுத்தடுத்து சாதனைகளை படைக்க வாய்ப்புண்டு.

Also read: Shreyasi Singh: பாரிஸ் ஒலிம்பிக்கில் பீகார் எம்எல்ஏ ஸ்ரேயாசி சிங்.. என்னது! இவரும் போட்டியாளரா..?

போட்டி சுருக்கம்:

இந்தியா – இலங்கை இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 49 ரன்களும், ஜெய்ஸ்வால் 40 ரன்களும் எடுத்திருந்தனர்.

பின்னர் இலக்கை துரத்திய இலங்கை அணி, 19.2 ஓவர்களில்170 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

Latest News