Swapnil Kusale: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. ஒலிம்பிக் போட்டியில் அசத்திய ஸ்வப்னில் குசலே..
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில், ஸ்வப்னில் குசலே 153.3 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் இருந்தார். ஆனால் போட்டியின் முடிவில், அவர் மொத்தம் 310.1 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில், மூன்றாவது இடத்தில் உள்ள உக்ரைனின் செர்ஹி குலிஷ் மற்றும் குசலே இடையேயான வித்தியாசம் 0.6 ஆக இருந்தது. ஆனால் போட்டி முடியும் தருவாயில் ஸ்வப்னில் குசலே முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடந்த 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். அவர் 451.4 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சீனாவின் யுகுன் லியு முதலிடமும், உக்ரைனின் செர்ஹி குலிஷ் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஸ்வப்னில் குசலே ரிசல்ட் பட்டியலை மாற்றியுள்ளார். அவர் உலக சாம்பியன்ஷிப்பில் நான்காவது இடமும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது இடமும் பிடித்திருந்தார். ஆனால் தற்போது பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Exceptional performance by Swapnil Kusale! Congrats to him for winning the Bronze medal in the Men’s 50m Rifle 3 Positions at the #ParisOlympics2024.
His performance is special because he’s shown great resilience and skills. He is also the first Indian athlete to win a medal in… pic.twitter.com/9zvCQBr29y
— Narendra Modi (@narendramodi) August 1, 2024
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில், ஸ்வப்னில் குசலே 153.3 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் இருந்தார். ஆனால் போட்டியின் முடிவில், அவர் மொத்தம் 310.1 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில், மூன்றாவது இடத்தில் உள்ள உக்ரைனின் செர்ஹி குலிஷ் மற்றும் குசலே இடையேயான வித்தியாசம் 0.6 ஆக இருந்தது. ஆனால் போட்டி முடியும் தருவாயில் ஸ்வப்னில் குசலே முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கத்தை வென்று கொடுத்த இவருக்கு, பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வப்னில் குசலே புனே ரயில்வே பிரிவில் பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) ஆக பணியாற்றி வந்தார். 1995 இல் பிறந்த இவர், விவசாயப் குடும்பத்தை சேர்ந்தவர். ஸ்வப்னில் குசேலேவின் தந்தை அவரை மகாராஷ்டிர அரசின் விளையாட்டு கழகத்தில் சேர்த்தார். ஒரு வருட கடின உடல் பயிற்சிக்குப் பிறகு, அவர் ஒரு விளையாட்டைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது, அவர் துப்பாக்கி சுடுதலைத் தேர்ந்தெடுத்தார்.
Also Read: ரேஷன் கடைகளில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறை.. இனி இப்படி தான் பொருட்கள் வாங்க முடியும்..
2015 ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஸ்வப்னில் குசலே 50 மீ ரைபிள் ப்ரோன் 3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். துக்ளகாபாத்தில் நடைபெற்ற 59வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ககன் நரங் மற்றும் செயின் சிங் ஆகியோரை விட 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் போட்டியில் வெற்றி பெற்றார். திருவனந்தபுரத்தில் நடந்த 61வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் தங்கம் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.