IND vs SL: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… மீண்டும் அணியில் ரோகித், விராட்..!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இது ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் , டி20 போட்டிக்கு சூரிய குமாரி யாதவ் கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

IND vs SL: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... மீண்டும் அணியில் ரோகித், விராட்..!
Updated On: 

18 Jul 2024 20:49 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை போட்டிகள் 17 வருடத்திற்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு நாடு திரும்பியது. சப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டி20 தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. உலக கோப்பையை வென்றவுடன் ஓய்வை அறிவித்த கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இப்போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று தகவல்கள் வெளிவந்தது. மேலும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா மேலும் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பதவி வகிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக டி20 போட்டிகள் கேப்டனாக பங்கேற்கவில்லை என்று விளையாடவில்லை என்று ஹர்திக் கூறியதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டி20 போட்டிகளுக்கு யார் அடுத்த கேப்டனாக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து  காத்திருந்த நிலையில், இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read: ஸ்மிருதி மந்தனா செய்துகாட்டிய டாப் 6 சாதனைகள்..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இந்தி அணிகள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக தொடர்கிறார்.

டி20 தொடர்

சூரியகுமார் யாதவ் ( கேப்டன்) சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் ( விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷோய், அர்ஷ்தீப் சிங், கலீல்  அகமது, முகமது சிராஜ் ஆகியோர் டி20 போட்டிகளில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் தொடர்

ரோகித் ஷர்மா ( கேப்டன்), சுப்மன் கில் ( துணை கேப்டன்) விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்) ரிஷப் பண்ட் ( விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், ஷிவம் தூபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷீத் ராணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Also Read: Smriti Mandhana: நேஷனல் க்ரஷ் ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று..!

வாய்ப்பு மறுக்கப்பட்ட ருத்துராஜ்

சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக செயல்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓப்பனராக நன்றாக விளையாடிய ருத்துராஜை, மூன்றாவது வீரராக களமிறக்கினர். அடுத்தடுத்து அவருக்கு 4வது வீரராக களமிறங்கிய ருத்துராஜ் 49 ரன்கள் எடுத்து தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.  இப்படி சிறப்பாக விளையாடிய ருத்துராஜிற்கு கடைசி போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிலையில், தற்போது இலங்கைக்கு எதிரான இந்திய அணியிலும் ருத்துராஜ் இடம்பெறவில்லை.  ருத்துராஜை தொடர்ந்து ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜாவிற்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!