IND vs NZ: டி20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்துடன் மோதல்.. வெற்றி பெறுமா இந்திய அணி..? - Tamil News | t20 world cup 2024 women indw vs nzw india vs new zealand live streaming head to head playing xi | TV9 Tamil

IND vs NZ: டி20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்துடன் மோதல்.. வெற்றி பெறுமா இந்திய அணி..?

Published: 

04 Oct 2024 11:22 AM

Women's T20 World Cup: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியானது இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் காண விரும்புவோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டுகளிக்கலாம். அதேபோல், போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம்.

IND vs NZ: டி20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்துடன் மோதல்.. வெற்றி பெறுமா இந்திய அணி..?

இந்தியா - நியூசிலாந்து (Image: PTI and Ahmed Ramzan-ICC/ICC via Getty Images)

Follow Us On

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேற்று முதல் தொடங்கியது. இன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும், நியூசிலாந்து மகளிர் அணிக்கு சோஃபி டிவைனும் தலைமை தாங்குகின்றனர். இந்தநிலையில், இந்தியா – நியூசிலாந்து மகளிர் அணிகள் இதுவரை எத்தனை போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது..? பிட்ச் ரிப்போர்ட் என்ன உள்ளிட்ட சில விவரங்களை இங்கே காண்போம்.

ALSO READ: Rishabh Pant Birthday Special: ஹீரோ ஆஃப் காபா..! எமனுடன் போரிட்டு கிரிக்கெட்டில் வாள் வீசிய ரிஷப் பண்ட்..!

பிட்ச் எப்படி..?

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய துபாய் ஸ்டேடியத்தில் இதுவரை 5 மகளிர் டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி இரண்டு முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. துபாய் ஸ்டேடியத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 90தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த ஸ்டேடியத்தில் அதிக ரன்கள் குவிப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயமாகும்.

போட்டியை எப்போது, எங்கு, எப்படி பார்க்கலாம்..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியானது இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் காண விரும்புவோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டுகளிக்கலாம். அதேபோல், போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த போட்டி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், இந்திய அணி 4 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் முதன்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மோதுகின்றன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

இந்தியா:

ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங் தாக்கூர்.

நியூசிலாந்து:

சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிலிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஜ் (வாரம்), ஹன்னா ரோவ், ஜெஸ் கெர், லீ காஸ்பெரெக், லீ தஹு.

ALSO READ: Babar Azam: கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம்.. பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்..?

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர் சிங், தயாளன் ஹேமலதா, எஸ் சஜ்னா, எஸ். ஷோபனா.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி

சுசி பேட்ஸ், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ் (விக்கெட் கீப்பர்), ஹன்னா ரோவ், ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ், லீ தஹு, லீ காஸ்பெரெக், ஜெஸ் கெர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர்.

இந்திய மகளிர் அணி அடுத்ததாக யாருடன் மோதுகிறது..?

இந்திய மகளிர் அணி இன்று நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், இதைத் தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தான் அணியை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. அதேசமயம் வருகின்ற புதன்கிழமை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. கடைசியாக, நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவை இந்திய அணி அக்டோபர் 13 ஆம் தேதி எதிர்கொள்கிறது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version