T20 World Cup: நிறைவான இதயத்துடன் விடைபெறுகிறேன்.. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு..!

Jadeja Retirement: இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து இந்திய நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  உலக கோப்பையை வென்ற கையோடு முக்கிய வீரர்கள் சர்வதேச  டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜடேஜாவின் சமூக வலைதளத்தின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

T20 World Cup: நிறைவான இதயத்துடன் விடைபெறுகிறேன்.. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு..!

ரவிந்திர ஜடேஜா

Updated On: 

30 Jun 2024 21:51 PM

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனைத்தொடர்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். 18 ஓவர் வரையிலும் தென் ஆப்பிரிக்க வசம் இருந்த வெற்றிவாய்ப்பு அதன் பிறகு இந்திய அணியின் பக்கம் திரும்பியது.

Also Read: Rohit Sharma: சர்வதேச டி20 போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஓய்வு..!

யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது சூர்யகுமார் யாதவின் கேட்ச் தான்.  கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,  ஹர்திக் பாண்டியா ஓவரில், மில்லரின் விக்கெட்டை எடுத்து சாதனை இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.  மில்லர் அந்த பந்தை சிக்ஸருக்கு அடித்த நிலையில்,  எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் எல்லைச்சாமி போன்று அந்த பந்தை  தாவிப்பிடித்த கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது. இந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கை அப்படியே இந்தியாவின் பக்கம் திருப்பியது. அடுத்தடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 17 ஆண்டுக்களுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிப்ரவரி 2009 இல் இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஜடேஜா, டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 74 போட்டிகளில் போட்டியில் விளையாடியுள்ளார்.  அவர் பங்கேற்ற 74 போட்டிகளில் விளையாடி மொத்தம் 515 ரன்களையும்,  54 விக்கெட்டுகளை  இந்திய அணியின் வெற்றிக்காக எடுத்துள்ளார்.

உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற விராட் கோலி, கேப்டன் ரோகித் நேற்றே ஓய்வை அறிவித்த நிலையில், இன்று ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா இன்று ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,  டி20 உலகக் கோப்பையை தன்னுடைய கையில் ஏந்தியபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள  ரவீந்திர ஜடேஜா, “அனைத்திற்கும் நன்றி. நான் நிறைவான இதயத்துடன், என் சர்வதேச டி20 கரியரியன் கனவான உலக கோப்பை வென்ற மகிச்சியுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்.

Also Read:T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி… வாழ்த்தும் பிரபலங்கள்!

உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். எப்போதும் என் நாட்டிற்கு எனது முழு ஆற்றலுடன் முடிந்ததை களத்தில் செய்திருக்கிறேன். மற்ற ஃபார்மட்டிகளில் தொடந்து அதை செய்வேன் என்று ஜடேஜா கூறியுள்ளார். மேலும்,  நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் என்னுடைய நன்றி. ஜெய் ஹிந்த்” என்று இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்