T20 World Cup: துணை கேப்டனாக ஹர்திக் தேர்வு.. ரோகித் ஷர்மா, அகர்கர் எதிர்ப்பு.. அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!
T20 World Cup: 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிசிசிஐ மற்றும் மும்பை அணி நிர்வாக தலையீடு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் 2024 டி 20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதற்கும் தேர்வு குழுவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், உயர்மட்ட அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் தேர்வுக்குழுவின் மீதும், பிசிசிஐ மீதும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. முதல் 17 நாட்களில் குரூப் போட்டிகளாக நடக்க உள்ளது. பின்னர் ஜூன் 19 முதல் ஜூன் 24 வரை சூப்பர் 8 சுற்றுகளும் அதன் பின்னர், அரையிறுதி போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய நாட்களிலும், இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறும் ஐசிசி அறிவித்துள்ளது.
Also Read: IPL 2024: பஞ்சாப் அணியின் வீரர்களின் குடும்பத்துடன் விராட்… வீடியோ வைரல்..!
டி20 உலக கோப்பை போட்டியின் துணை கேப்டனாக இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல், மும்பை இந்தியன்ஸ் அணி லீக் தொடரிலேயே முன்னேறியது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், இந்த உலக கோப்பை தொடரில் மும்பை அணியின் வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இதில் அடங்குவர்.
கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் அகர்கரிடம் ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “துணை கேப்டன் பதவி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவருகிறார் என்பது அவருடைய உடற்தகுதி நன்றாக இருப்பதை குறிக்கிறது. அவர் உடற்தகுதியுடன் இருக்கும் வரை, அவரால் என்ன செய்ய முடியும் என்பதற்கு மாற்று வீரர் அணியில் யாரும் இல்லை” என்று தெரிவித்தார். ஆனால், இந்த வாரம் வெளியான தகவலில் ஹர்திக் பாண்டியா தேர்வு விவகாரத்தில் தேர்வு குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஆலோசிக்காமல் எடுத்த முடிவு என்று கூறப்பட்டுள்ளது. இதில் பிசிசிஐ மற்றும் மும்பை அணி நிர்வாகத்தின் தலையீடு அதிகம் உள்ளதகாவும் காட்டி டைனிக் ஜாக்ரானில் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.