டி20 உலக கோப்பை: இந்திய அணியின் சிறந்த கேப்டன் ரோகித்.. யுவராஜ் பெருமிதம்

இந்திய அணியை உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு ​​அழைத்து சென்ற ரோஹித் ஷர்மா தான் டி20 உலக கோப்பை தொடருக்கு சிறந்த கேப்டன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை: இந்திய அணியின் சிறந்த கேப்டன் ரோகித்.. யுவராஜ் பெருமிதம்
Updated On: 

08 May 2024 02:57 AM

மும்பை அணியின் கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். மேலும், 50 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி வரைக்கும் இந்திய அணியை அழைத்து சென்றவர். அவரைப் போன்ற கேப்டன் தான் தற்போது தேவை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளது யுவராஜ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின்  உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரோஹித் சர்மா குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் இணையத்தில் வைராகி வருகிறது.

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன்  டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.  இந்தியா சார்பில் உலக கோப்பை தொடரில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் செயல்படுவது குறித்து யுவராஜ் சிங்கிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “ரோஹித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை என்ற சூழல் உள்ளது. அழுத்தமான சூழ்நிலைகளின் போது விவேகமான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் தேவை, அது ரோஹித் சர்மா தான்.” என பதில் அளித்தார்.

Aslo Read: டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு வீரருக்கும் ரூ.83 லட்சம் பரிசு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மேலும், “2023 ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றது ரோஹித் சர்மா தான். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 முறை மும்பை அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை. ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன்.  மேலும், உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு ரோகித் சர்மா தகுதியானவர்” என யுவராஜ் சிங் கூறினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித்துடனான முதல் சந்திப்பின் நினைவைப் பற்றி கேட்டபோது, ​​யுவராஜ் நகைச்சுவையான தொனியில், ‘ஆங்கிலம் தெரியாமல் நாங்கள் பேசியது தான்” என்றார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பரத் தூதராக உள்ள யுவராஜ் சிங், இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர். மேலும், புற்றுநோயுடன் மிக கடுமையாக போராடிய நிலையிலும்,  2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் வெற்றிக்கு போராடியவர். உலக கோப்பை தொடர் நாயகனாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு மரியாதைக்குரிய விளம்பர தூதர் பதவி அளிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

 

மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ