டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார்? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடுவர்களாக பங்கேற்பவர்களின் பெயர்களை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார்? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு
Updated On: 

04 May 2024 08:43 AM

அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை வரும் மே ஒன்றாம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்த நிலையில், இந்திய அணியின் வீரர்கள் அடங்கிய குழுவை பிசிசிஐ வெளியிட்டது.

ஐசிசி T-20 கிரிக்கெட் உலகக் கோப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சர்வதேச போட்டியாகும். இத்தொடர் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐசிசி T-20 உலக கோப்பையின் முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை பட்டியலில் இடம்பெற்றது. தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழ்ந்த இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Aslo Read: ஐபிஎல் 2024: சிஎஸ்கே தொடரும் பின்னடைவு.. நாடு திரும்பிய வீரர்கள்..!

வரும் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணியை வரும் மே ஒன்றாம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்த நிலையில், இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச வீரர்களின் பட்டிலை பிசிசிஐ இன்று வெளியிட்டது.

T-20 உலக கோப்பை போட்டிகள்,முதல் 17 நாட்களில் குரூப் போட்டிகளாக நடக்க உள்ளது. பின்னர் ஜூன் 19 முதல் ஜூன் 24 வரை சூப்பர் 8 சுற்றுகளும் அதன் பின்னர், அரையிறுதி போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய நாட்களிலும், இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறும் ஐசிசி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் சார்பாக டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐசிசி  டி20 உலக கோப்பை போட்டிக்கான நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிறிஸ் பிரவுன், தர்மசேனா, கஃபேனி, கோஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, மதனகோபால், மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், ரீஃபெல், லாங்டன் சா ருசேர் , அலெக்ஸ் வார்ஃப், வில்சன் மற்றும் ஆசிஃப் யாகூப்.

டேவிட் பூன், ஜெப் குரோவ், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மேட்ச் ரெப்ரிகளாக செயல்படுகின்றனர்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி