T20 Worldcup: உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் அயர்லாந்தை சுருட்டிய இந்தியா..! - Tamil News | | TV9 Tamil

T20 Worldcup: உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் அயர்லாந்தை சுருட்டிய இந்தியா..!

Updated On: 

06 Jun 2024 14:19 PM

India: T20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை தொடர் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அமெரிக்காவிற்கு சென்றனர். தற்போது அமெரிக்காவில் முதல் சுற்றி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

T20 Worldcup: உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் அயர்லாந்தை சுருட்டிய இந்தியா..!

இந்தியா.

Follow Us On

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 8 விக்கெட்டுகளில் அயர்லாந்தை எளிதில் வென்றது இந்தியா. அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக், சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.   பவுலிங்கை தேர்வு  செய்த இந்தியா, அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்நிலையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில், 10 ஓவருக்கும் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 12 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இத்தொடரில்  எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஆனால், சிறுது நேரத்தில், தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினார்.  ரிஷப் பண்ட் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில்  அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் தந்து மூன்று விக்கெட் எடுத்தனர்.

டி20 உலக கோப்பை தொடருக்காக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வெறும் ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. எனவே நிறைய குழப்பங்களுடன், எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. நாங்கள் பேட் செய்த பொழுதும் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறவில்லை என்று கூறினார். மேலும் இந்த மைதானத்தில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு எல்லாம் விளையாட முடியாது. சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே அதற்கு தகுந்தபடி நாங்கள் அணியை தேர்வு செய்தோம் என்று வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித்சர்மா கூறினார்.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version