T20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு
வங்கதேசத்தில் நடைபெறவுள்ள டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ளதாக ஐசிசி ஏற்கனவே அறிவித்த நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் நடைபெறும் லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட் 10 அணிகள் பங்கேற்கின்றனர். இறுதி போட்டியானது வரும் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 ஆண்கள் உலககோப்பை தொடரானது அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. ஆண்கள் கிரிக்கெட் போலவே பெண்கள் கிரிக்கெட்டிற்கான அங்கீகாரமும் ரசிகர்களிடையே அதிகளவில் உள்ளது. அதேபோல், டி 20 பெண்கள் உலககோப்பை இத்தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Also Read: ஐபிஎல் 2024: குஜராத்தை அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி அபார வெற்றி
கிரிக்கெட்டில் எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவும், அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குரூப்பில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. இம்முறை இந்திய பெண்கள் அணி கோப்பையை கட்டாயம் வெல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The ICC Women’s #T20WorldCup 2024 in Bangladesh to commence on 3 October with the final slated for 20 October.
Details 👉 https://t.co/MRtx7UXXPM pic.twitter.com/v4jBsD0gIe
— ICC (@ICC) May 5, 2024
மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை
- அக்டோபர் 3: இங்கிலாந்து v தென் ஆப்பிரிக்கா, டாக்கா
- அக்டோபர் 3: வங்கதேசம் v குவாலிஃபையர் 2, டாக்கா
- அக்டோபர் 4: ஆஸ்திரேலியா v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
- அக்டோபர் 4: இந்தியா v நியூசிலாந்து, சில்ஹெட்
- அக்டோபர் 5: தென் ஆப்பிரிக்கா v வெஸ்ட் இண்டீஸ், டாக்கா
- அக்டோபர் 5: வங்கதேசம் v இங்கிலாந்து, டாக்கா
- அக்டோபர் 6: நியூசிலாந்து v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
- அக்டோபர் 6: இந்தியா v பாகிஸ்தான், சில்ஹெட்
- அக்டோபர் 7: வங்கதேசம் v குவாலிஃபையர் 2, டாக்கா
- அக்டோபர் 8: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான், சில்ஹெட்
- அக்டோபர் 9: வங்கதேசம் v வெஸ்ட் இண்டீஸ், டாக்கா
- அக்டோபர் 9: இந்தியா v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
- அக்டோபர் 10: தென் ஆப்பிரிக்கா v குவாலிஃபையர் 2, டாக்கா
- அக்டோபர் 11: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து, சில்ஹெட்
- அக்டோபர் 11: பாகிஸ்தான் v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
- அக்டோபர் 12: இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ், டாக்கா
- அக்டோபர் 12: வங்கதேசம் v தென் ஆப்பிரிக்கா, டாக்கா
- அக்டோபர் 13: பாகிஸ்தான் v நியூசிலாந்து, சில்ஹெட்
- அக்டோபர் 13: இந்தியா v ஆஸ்திரேலியா, சில்ஹெட்
- அக்டோபர் 14: இங்கிலாந்து v குவாலிஃபையர் 2, டாக்கா
- அக்டோபர் 17: முதல் அரையிறுதி, சில்ஹெட்
- அக்டோபர் 18: இரண்டாவது அரையிறுதி, டாக்கா
- அக்டோபர் 20: இறுதிப்போட்டி, டாக்கா
ஆண்கள் கிரிக்கெட் முடிந்தவுடன் தொடங்கும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் 10 அணிகள் பங்கேற்கும் இந்த அணிக்கான வீராங்கணைகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.