Gianmarco Tamberi: ஒலிம்பிக் விழாவில் தொலைந்த திருமண மோதிரம்.. அதிர்ந்த இத்தாலி வீரர்.. மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

Olympic Ceremony: பொதுவாக பாரிஸ் நகரம் காதல் நகரம் என்று அழைக்கப்படும். அதிலும் ஈபிள் டவர் முன்பு மண்டியிட்டு அமர்ந்து மோதிரம் அணிந்து கொண்டு தன் காதலன் அல்லது கணவன் தனக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின்போது, இத்தாலியின் ஒலிம்பிக் சாம்பியனான ஜியான்மார்கோ தம்பேரி, தனது திருமண மோதிரத்தை ஆற்றில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து, தம்பேரி தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Gianmarco Tamberi: ஒலிம்பிக் விழாவில் தொலைந்த திருமண மோதிரம்.. அதிர்ந்த இத்தாலி வீரர்.. மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

ஜியான்மார்கோ தம்பேரி மற்றும் அவரது மனைவி

Published: 

29 Jul 2024 10:28 AM

தொலைந்த மோதிரம்: கடந்த ஜூலை 26ம் தேதி பாரிஸில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் தற்போது அனல் பரந்து வருகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரமாண்ட தொடக்க விழா செய்ன் நதிக்கரையில் நடந்தது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் தொடக்க விழா அனைத்தும் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு நதிக்கரையில் நடந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் தங்களது நாட்டை சேர்ந்த தேசிய கொடிகளை ஏந்தி, தங்களது நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். பொதுவாக பாரிஸ் நகரம் காதல் நகரம் என்று அழைக்கப்படும். அதிலும் ஈபிள் டவர் முன்பு மண்டியிட்டு அமர்ந்து மோதிரம் அணிந்து கொண்டு தன் காதலன் அல்லது கணவன் தனக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின்போது, இத்தாலியின் ஒலிம்பிக் சாம்பியனான ஜியான்மார்கோ தம்பேரி, தனது திருமண மோதிரத்தை ஆற்றில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து, தம்பேரி தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Also read: Manu Bhaker Struggle Story: வாடகை துப்பாக்கியுடன் நேஷனல் போட்டியில் களம்.. மனு பாக்கரின் போராட்ட கதை!

என்ன நடந்தது..?


செய்ன் நதியில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவின்போது இத்தாலியில் உயரம் தாண்டுதல் வீரர் ஜியான்மார்கோ தம்பேரி இத்தாலியின் கொடியை ஏந்தினார். அப்போது இவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். இப்படிப்பட்ட பெருமை கிடைக்கும்போது எந்த ஒரு விளையாட்டு வீரரும் சந்தோஷத்தில் மிதப்பது இயல்புதான். இதனால் மெய் மறந்துபோன ஜியான்மார்கோ தம்பேரி தனது திருமண மோதிரம் அவரது விரலில் இருந்து விழுவதை கூட அறியாமல் இருந்துள்ளார். அப்போது, அந்த திருமண மோதிரமானது ஆற்றில் விழுந்துள்ளது.

மன்னிப்பு கேட்ட தம்பேரி:


இதையடுத்து, ஜியான்மார்கோ தம்பேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் 4 புகைப்படங்களை பகிர்ந்து தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், “ என்னை மன்னிக்கவும் அன்பே! இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அங்கு நிறைய தண்ணீர் இருந்தது. மேலும் கடந்த சில மாதங்களாக என் எடை மிகவும் குறைந்துள்ளது. நாங்கள் அனைவரும் பாரிஸ் தொடக்க விழாவில் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அப்போது நமது திருமண மோதிரம் எனது விரலில் இருந்து விழுவதை உணர்ந்து, அதை பிடிக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. இதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும்” என மன்னிப்பு கேட்டார்.

Also read: Who is Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்.. அசத்திய இந்திய வீராங்கனை மனு பாக்கர்.. யார் இவர் ..?

இதற்கு பதிலளித்த தம்பேரி போண்டெம் மனைவி:

இதற்கு பதிலளித்த ஜியான்பார்கோ தம்பேரியின் மனைவி போண்டெம் அந்த பதிவில், “ உங்களால் மட்டுமே இதுபோன்ற ஒன்றை இன்னும் காதல் நிறைந்ததாக மாற்ற முடியும்.” என தெரிவித்திருந்தார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!