5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Grand Masters 2024: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸில் அமெரிக்க வீரரை வீழ்த்தி சாம்பியன்.. கலக்கிய தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம்!

Aravindh Chithambaram: அமெரிக்காவின் லெவோன் அரோனியன், தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம், அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகளை பெற்றிருந்தனர். மாஸ்டர்ஸ் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்ல மூன்று போட்டியாளர்களிடையே முத்தரப்பு போட்டி நடைபெற்றது. யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்க மூவரிடையே டை பிரேக்கர் நடத்தப்பட்டது.

Chennai Grand Masters 2024: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸில் அமெரிக்க வீரரை வீழ்த்தி சாம்பியன்.. கலக்கிய தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம்!
அரவிந்த் சிதம்பரம் (Image: chessbase.in)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Nov 2024 10:23 AM

இந்தியாவின் மிக முக்கிய கிளாசிக்கல் செஸ் போட்டிகளில் ஒன்றாக சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸின் இரண்டாவது பதிப்பான கோட்டூர்புரத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் கடைசி மற்றும் 7வது சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். அதேநேரத்தில், மற்றொரு கிராண்ட்மாஸ்டரான பிரணவ் வெங்கடேஷ் முழு போட்டியிலும் தோற்காமல் சேலஞ்சர்ஸ் பட்டத்திற்கு தகுதி பெற்றார்.

முன்னதாக, சேலஞ்சர் பிரிவில் கிராண்ட்மாஸ்டர் லூக் மெண்டன்காவுக்கு எதிராக பிரணவ் வெங்கடேஷூக்கு டிரா மட்டுமே தேவைப்பட்டது. இதையடுத்து, பிரணவ் போட்டியை டிரா செய்து சேலஞ்சர்ஸ் பட்டத்தை வென்றார்.

ALSO READ: Sanjay Bangar: ஆர்யன் டூ அனயா.. பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரரின் மகன்!

மாஸ்டர்ஸ் பிரிவு:

மாஸ்டர்ஸ் பிரிவில் 7வது மற்றும் கடைசி சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்காவின் லெவோன் ஆரோக்கியனும், ஈரானின் அமீன் தபதாபோயும் மோதினர். இந்த ஆட்டமானது 15வது காய் நகர்த்தலின்போது டிராவில் முடிந்தது. இதே பிரிவின் 2வது போட்டியிலும் செர்பியா நாட்டை சேர்ந்த அலெக்ஸி சரானாவுக்கும், இந்தியாவை சேர்ந்த விதித்தும் இடையில் நடைபெற்றது. இந்த ஆட்டமானது 48வது நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது.

தொடர்ந்து 3வது போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாக்சிம் வாச்சியருக்கு இடையே நடந்தது. இதில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன் 38வது நகர்த்தலின்போது டிரா செய்தார். இதேபோல், 4வது போட்டியில் ஈரான் நாட்டை சேர்ந்த பர்ஹாமும், தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்திற்கும் இடையே நடைபெற்றது. இதில், கருப்பு நிற காயுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 64வது நகர்த்தலின்போது ஆட்டத்தை டிரா செய்தார்.

இதனால், அமெரிக்காவின் லெவோன் அரோனியன், தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம், அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகளை பெற்றிருந்தனர். மாஸ்டர்ஸ் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்ல மூன்று போட்டியாளர்களிடையே முத்தரப்பு போட்டி நடைபெற்றது. யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்க மூவரிடையே டை பிரேக்கர் நடத்தப்பட்டது. முதல் டைபிரேக்கர் சுற்றில் அரோனியன் மற்றும் அர்ஜூன் எரிகைசி மோதினர். 2 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முதல் ஆட்டத்தில் அரோனியனும், 2வது ஆட்டத்தில் அர்ஜூனும் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, மீண்டும் வெற்றியாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் சடன் டெத் முறை விளையாடப்பட்டது. இந்த போட்டி டிரா ஆன நிலையில், கருப்பு காய்களுடன் விளையாடிய அமெரிக்காவின் லெவோன் அரோனியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரோனியனுக்கும், அரவிந்த் சிதம்பரத்திற்கும் அடுத்ததாக டை பிரேக்கர் நடத்தப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டை பிரேக்கர் ஆட்டங்களிலும் தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதையடுத்து வெற்றிபெற்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு பரிசுத் தொகையாக ரூ. 11 லட்சம் வழங்கப்பட்டது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற அரவிந்த் சிதம்பரம் மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: BGT 2024: இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித்.. பும்ரா புதிய கேப்டனா..?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Latest News