5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SL: முதல் டி20 போட்டி… 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!

இந்தியா அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நேற்று பல்லிகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இலங்கை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.iல

IND vs SL:  முதல் டி20 போட்டி… 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!
இந்திய அணி
intern
Tamil TV9 | Updated On: 28 Jul 2024 14:00 PM

இலங்கையில் உள்ள பல்லிகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதலில், பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும்  கில் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால், 21 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் என 40 ரன்கள் எடுத்த நிலையில், ஹசரங்கா சுழலில் சிக்கி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்த கில் 16 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். பொறுப்புடன் விளையாடிய சூர்யக்குமார் யாதவ் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என விளாசி 26 பந்துகளில், அரை சதத்தை பூர்த்தி செய்து 58 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு 33 பந்துகளில் 49 ரன்களை குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்களில் பத்திரனா சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Also Read: RRB Recruitment 2024: ரயில்வேயில் அட்டகாசமான வேலை.. 7,951 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

ரிங்கு சிங்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடிய ரிங்கு சிங் உலக கோப்பை போட்டியில் இடம்பிடித்த நிலையில், அவருக்கு ப்ளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்காத அவர், இலங்கை உடனான போட்டியில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்தடுத்து விளையாடிய வீரர்கள், அக்சார் பட்டேல் 10 ரன்னிலும், அர்ஷ்தீப் சிங் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் 213 ரன்களை மட்டுமே எடுத்தது.

214 ரன்கள் இலக்கு

நன்றாக விளையாடிய இந்திய அணி 213 ரன்களை எடுத்த நிலையில், 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிசு இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். நிசங்க 48 பந்துகளில், 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி 79 ரன்களில் அக்சர் பட்டேல் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். மெண்டிஸ் 27 பந்துகளில் 45 ரன்களை எடுத்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். குசல் பெரேரா மற்றும் நிசாங்கா இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பெரோரா 14 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா, தசன் ஷனகா, கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்கா, பதிரனா, தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷங்கா இலங்கை வீரர்கள் இந்திய அணியின் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு அந்த ஆல் அவுட் ஆனது. அதன் மூலம் இந்தியா 43 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றி கேப்டன் சூர்யகுமார் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இருவரும் தங்களது முதல் போட்டியை வெற்றிக்கணக்குடன் தொடங்கி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளனர்.

Also Read: Heart Attack: மாரடைப்பு வந்துவிடும் என்று பயமா..? தினமும் இதை செய்தாலே போதும்! ஹார்ட் அட்டாக் வராது..

ஆட்ட நாயகன் விருது

சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கும் நிலையில் 2-வது டி20 தொடர் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியை சோனி லைவ்லில் கிரிக்கெட் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

 

Latest News