Team India Squad: ஷமி முதல் துபே வரை காயத்தால் அவதி.. முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ..! - Tamil News | Team India Squad: From Mohammed Shami to shivam dube BCCI has dropped several key players due to injuries | TV9 Tamil

Team India Squad: ஷமி முதல் துபே வரை காயத்தால் அவதி.. முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ..!

Indian Cricket Team: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் ஆல் ரவுண்டர் ஷிபம் துபே வரை பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு முக்கியமான தொடர்களிலும் இவர்களால் இடம் பெற முடியவில்லை. அந்தவகையில், எந்தெந்த வீரர்கள் காயம் காரணமாக இடம் பெறவில்லை என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Team India Squad: ஷமி முதல் துபே வரை காயத்தால் அவதி.. முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ..!

முகமது ஷமி - சிவம் துபே - குல்தீப் யாதவ் (Image: GETTY and PTI)

Published: 

26 Oct 2024 11:48 AM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 25ம் தேதியான நேற்று அறிவித்தது. இதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ அறிவித்தது. இந்த இரண்டு அணிகளிலூம் சில முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது, இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் ஆல் ரவுண்டர் ஷிபம் துபே வரை பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு முக்கியமான தொடர்களிலும் இவர்களால் இடம் பெற முடியவில்லை. அந்தவகையில், எந்தெந்த வீரர்கள் காயம் காரணமாக இடம் பெறவில்லை என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: IND vs NZ 2nd Test: ரோஹித் படைக்கு 359 ரன்கள் இலக்கு.. இதுவரை இந்திய அணி செய்த மிகப்பெரிய சேஸிங் லிஸ்ட் இதோ!

முகமது ஷமி:

கடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலேயே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது வங்கதேசம், நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி காயம் காரணமாக இடம் பெறவில்லை. ஷமிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2023 உலகக் கோப்பைக்கு பிறகு எந்த தொடரிலும் விளையாடவில்லை. இதன் காரணமாக, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். இதையடுத்து, முகமது ஷமிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ்:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இடம் பெறாதது ஆச்சர்யமாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இடது இடுப்புப் பகுதியில் பிரச்சனை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

சிவம் துபே:

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் சிவம் துபே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரையும் தவறவிட்டார். இதையடுத்து, துபே இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை என்று தெரிகிறது.

மயங்க் யாதவ்:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட மயங்க் யாதவ், காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரை தவறவிட்டார்.

ரியான் பராக்:

இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனாக காணப்படும் ரியான் பராக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. நீண்ட காலமாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ரியான் பராக், பிசிசிஐ சிறப்பு மையத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

ALSO READ: India Team BGT: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. ரோஹித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஆர் ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசாத் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், யாஷ் தயாள்.

உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?