Mohammedsiraj: இந்திய வீரர் முகமது சிராஜிற்கு அரசுப்பணி, வீடு வழங்கப்படும் – தெலுங்கான முதல்வர் உறுதி

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமைகளான இந்திய அணி 17 வருடத்திற்கு பிறகு உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையை வென்ற அணி இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிற்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

Mohammedsiraj: இந்திய வீரர் முகமது சிராஜிற்கு அரசுப்பணி, வீடு வழங்கப்படும் - தெலுங்கான முதல்வர் உறுதி
Updated On: 

10 Jul 2024 16:10 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 17 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது

Also Read: Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம்… ஜெய்ஷா அறிவிப்பு

உலக கோப்பையை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டினார் மேலும் பிசிசிஐ சார்பில் 125 கோடி பரிசுகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க இந்திய அணியினர் மும்பை வான்கடே மைதானத்திற்கு திறந்த வெளி பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். உலக கோப்பையை பெற்று 10 நாட்களுக்கு மேல் ஆன நிலைகள் இன்றும் அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு பரிசும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்தி காணிகள் இடம் பெற்ற ஹைதராபாத் சேர்ந்த வேகம் பந்துவீச்சாளர் முகமது சிராஜிற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிசுகளை அறிவித்து பாராட்டியுள்ளார். உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய வீரர்கள் வீடு திரும்பினர்.

 

வீடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் மேளதாளங்களுடன் மரியாதை அளித்து வரவேற்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜுக்கும் மாநில மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். தங்கள் சார்ந்த மாநிலத்தின் முதல்வர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். அதில் முகமது சிராஜ் ரேவந்த் ரெட்டியை சந்தித்த நிலைகள் அவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கினார். அப்போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்திய கிரிக்கெட் முகமது சிராஜிற்கு தெலுங்கானா மாநில அரசு சார்பாக ஹைதராபாத்தில் வீடு வழங்கப்படும் என்றும் மாநில அரசில் அரசு பணி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

 

Aslo Read: சென்னையில் ஒரே டிக்கெட் முறை.. எப்போது அறிமுகம்? வந்தது முக்கிய அறிவிப்பு!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!