Thulasimathi Murugesan: விபத்தில் சேதமடைந்த கை.. தன்னம்பிக்கையை விடாத துளசிமதி.. வெள்ளி வென்று அசத்தல்!

Paralympics: SU5 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் சீனாவின் யாங் கிசியாவிடம் தோல்வியைச் சந்தித்தார். இதன்மூலம், தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த துளசிமதி முருகேசன், வெள்ளி பதக்கத்துடன் வெளியேறினார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான மனிஷா ராம்தாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனிஷா ராம்தாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ரோசன்கிரன் கேத்ரினை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

Thulasimathi Murugesan: விபத்தில் சேதமடைந்த கை.. தன்னம்பிக்கையை விடாத துளசிமதி.. வெள்ளி வென்று அசத்தல்!

துளசிமதி முருகேசன் (Photo Credit: Steph Chambers/Getty Images)

Published: 

03 Sep 2024 10:49 AM

பாராலிம்பிக்: பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். செப்டம்பர் 2ம் தேதியான நேற்று நடைபெற்ற SU5 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் சீனாவின் யாங் கிசியாவிடம் தோல்வியைச் சந்தித்தார். இதன்மூலம், தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த துளசிமதி முருகேசன், வெள்ளி பதக்கத்துடன் வெளியேறினார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான மனிஷா ராம்தாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனிஷா ராம்தாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ரோசன்கிரன் கேத்ரினை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

ALSO READ: Paralympics 2024: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. பேட்மிண்டனில் கலக்கிய நிதேஷ் குமார்..!

யார் இந்த துளசிமதி முருகேசன்..?

கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டை அடுத்த காஞ்சிபுரத்தில் பிறந்தார் துளசிமதி முருகேசன். 22 வயதான துளசிமதி முருகேசனுக்கு சிறுவயதிலிருந்தே இடது கையில் கட்டைவிரல் இல்லை. இதற்கு பிறகு எதிர்பாராத விபத்தை சந்தித்த துளசிமதி, இடது கையில் பலத்த சேதம் ஏற்பட்டது. இத்தனை சோதனைகள் வந்தாலும் தளராத துளசிமதி முருகேசன் 7 வயதிலிருந்தே பேட்மிண்டன் வீராங்கனையாக மாற வேண்டும் என்ற கனவுடன் வலம் வர தொடங்கினார். அதன்பிறகு, புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். அதன்பிறகு, அவரது சாதனை பட்டியல் நிற்கவே இல்லை.

2024 பாராலிம்பிக் முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் SL3-SU5 மற்றும் SU5 இல் 3 பதக்கங்களை வென்று அசத்தினார். இதை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் மான்சி ஜோஷியுடன் இணைந்து நாட்டுக்காக தங்கப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டில், துளசிமதி முருகேசன், மான்சி ஜோஷியுடன் இணைந்து உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். தற்போது பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தற்போது, நடைபெற்ற 2024 பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று கெத்து காட்டினார்.

ALSO READ: Paralympics: பாராலிம்பிக்கில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி.. வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைப்பு!

2024 பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் அரையிறுதியில் 23-21, 21-17 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மனிஷாவை தோற்கடித்தார். இருப்பினும், இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைக்கு எதிராக துளசிமதி முருகேசன் சிறப்பாக செயல்பட முடியவில்லை. மறுபுறம், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை எதிர்த்து மனிஷா எளிதாக வெற்றி பெற்று, இந்தியாவின் பதக்க பட்டியலை அதிகரிக்க செய்தார்.

தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!
கிராமத்து லுக்கில் நடிகை அதிதி ஷங்கர்!
நடிகை ஷ்ரத்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!