Kasima: உதவிய உதயநிதி.. கேரம் போட்டியில் உலக சாம்பியனான காசிமா!

World Cup Carrom: எளிய பின்பலம் கொண்ட காசிமாவின் வெற்றியை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவுக்கு ரூ. 1.50 லட்சம் நிதி உதவி செய்தார்.

Kasima: உதவிய உதயநிதி.. கேரம் போட்டியில் உலக சாம்பியனான காசிமா!

காசிமா

Updated On: 

17 Nov 2024 20:45 PM

அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலகக்கோப்பை கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது! ” என தெரிவித்துள்ளார். 

Also Read: ஆஸிக்கு எதிரான டெஸ்ட்! 5 ஸ்டேடியங்களில் இந்திய அணி சாதனை எப்படி?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 6வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் இந்த சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா என்ற 17 வயது இளம் பெண்ணும் கலந்து கொண்டிருந்தார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகளான காசிமா தனிநபர், இரட்டையர் மற்றும் குழு என மூன்று பிரிவுகளில் தங்கும் வென்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் காசிமா, மித்ரா, நாகஜோதி, மரிய இருதயம் ஆகிய 4 பேர் பங்கேற்று இருந்தனர். இப்படியான நிலையில் வரும் நவம்பர் 21ம் தேதி அமெரிக்காவிலிருந்து தங்கப் பதக்கங்களோடு காசிமா நாடு திரும்ப உள்ளார். இதனிடையே, “மகள் தங்கம் வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருந்தது” என அவரது தந்தை தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கிறது. எனது மகளுக்கு இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

Also Read: IPL 2025 Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் 13வயது கிரிக்கெட் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?

எளிய பின்பலம் கொண்ட காசிமாவின் வெற்றியை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவுக்கு ரூ. 1.50 லட்சம் நிதி உதவி செய்தார். இந்நிலையில் அவரது வெற்றி குறித்து பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் – பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!” என வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Related Stories
Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசால்ட் செய்யுமா..? 5 ஸ்டேடியங்களில் இந்திய அணியின் சாதனை எப்படி?
IPL 2025 Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் 13வயது கிரிக்கெட் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?
India T20 schedule 2025: இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் எப்போது? எந்த அணிக்கு எதிராக?
Ranji Trophy 2024: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்.. கேரளாவுக்கு எதிராக கலக்கிய அன்ஷூல் கம்போஜ்!
Border-Gavaskar Trophy: பெர்த் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்.. இங்கு அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் யார்?
ICC Champions Trophy 2025: குறைந்தது ஒரு போட்டியாவது விளையாடுங்கள்.. இந்தியாவிடம் இறங்கிவந்த பாகிஸ்தான் வாரியம்!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ