5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chou Tzuyu : திடீர் வைரல்.. ஒலிம்பிக் நேரத்தில் வைரலான தைவான் பாடகி.. யார் இந்த சௌ சூயூ?

Trending Beauty: 2024 ஒலிம்பிக் விளையாட்டின் பல தருணங்களின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படுவைரலானது. இதில், மனு பாக்கர் வெண்கலம் வென்றது உள்ளிட்ட சில படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. அந்தவகையில், பாரிஸ் ஒலிம்பிக் முடிந்தும் தைவான் வீராங்கனை என்று அழைக்கப்படும் சௌ சூயூசின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிலர் இவர் பேரழகாக இருப்பதால், இது சித்தரிக்கப்பட்டது என்றும், AI உருவாக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

Chou Tzuyu : திடீர் வைரல்.. ஒலிம்பிக் நேரத்தில் வைரலான தைவான் பாடகி.. யார் இந்த சௌ சூயூ?
தைவான் பாடகி சௌ சூயூ
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 26 Aug 2024 10:04 AM

தைவான் பாடகி: பிரான்ஸில் உள்ள பாரிஸில் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், 5 வெண்கலம், 1 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது. இந்தாண்டு இந்தியா 10க்கு மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. 2024 ஒலிம்பிக் விளையாட்டின் பல தருணங்களின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படுவைரலானது. இதில், மனு பாக்கர் வெண்கலம் வென்றது உள்ளிட்ட சில படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. அந்தவகையில், பாரிஸ் ஒலிம்பிக் முடிந்தும் தைவான் வீராங்கனை என்று அழைக்கப்படும் சௌ சூயூசின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிலர் இவர் பேரழகாக இருப்பதால், இது சித்தரிக்கப்பட்டது என்றும், AI உருவாக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

ALSO READ: Cricket Stadium: கோவையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. சூப்பர் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு!

யார் இந்த ஜூ சூயூ..?

கடந்த 1999ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தைவானில் பிறந்த சௌ சூயூ, தனது குழந்தை பருவத்திலிருந்தே இசை, நடனம் அனைத்திலும் ஆர்வமாக இருந்தார். இவரது கலைத்திறன்களை பெற்றோர் ஊக்குவித்துள்ளனர். இதன் காரணமாக, சௌ ட்சுயு தைவானின் ரியாலிட்டி ஷோஒவான சிக்ஸ்டீன் – ல் இணைந்து, தனது நடனத் திறமையால் உலக முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதன் பிறகு, சௌ சூயூ கொரிய கே-பாப் குழுவின் ஒன்றான TWICE ல் உறுப்பினராக இணைந்தார். இவரது வீடியோ கிளிப்புகளை பார்த்த ரசிகர்கள், சௌ சூயூ பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தென் கொரிய வில்வித்தை வீராங்கனை என்று தவறாக நினைக்கிறார்கள். சமீபத்தில், சௌ சூயூ வில்வித்தை பயிற்சி செய்யும், அவரது பழைய கிளிப்புகள் இணையத்தில் பரவி வருகின்றன.

சௌ சூயூ ஒரு வில்வித்தை வீராங்கனைதான் என்றாலும், சௌ சூயூக்கும் ஒலிம்பிக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சௌ சூயூவின் வில்வித்தையின் வைரல் வீடியோக்கள் அனைத்தும் ஐடல் ஸ்டார் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற போட்டிகளுடையது. சௌ சூயூ ஒரு வில்வித்தை வீராங்கனை என்பதை கடந்து திறமையான பாடகி. ‘TWICE’ குழுவில் இவர் பாடிய Like OOH-AHH” பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை எட்டியது.

ALSO READ: ODI Century: ஒரு நாள் போட்டியில் பதிவாகாத சதம்.. 38 ஆண்டுகாலத்தில் முதல்முறை.. இந்திய அணி மோசமான சாதனை!

இது மட்டுமல்லாது சௌ சூயூ பல விளம்பரம் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், பல கொரிய இசை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Latest News