5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Happy Birthday Umesh Yadav: பாதியில் நின்ற கல்வி.. நிலக்கரி சுரங்கத்தில் வேலை.. இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம் பிடித்த கதை!

Umesh Yadav: உமேஷின் நல்ல உடலமைப்பு காரணமாக, அவர் போலீஸ் அல்லது ராணுவ வீரராக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். இதையடுத்து, கல்வி எதிர்பார்த்தபடி அமையாததால் தந்தையின் கனவை நிறைவேற்ற பல அரசு வேலைகளுக்கு முயற்சி செய்தார். காவல்துறை மற்றும் இராணுவத்தில் சேர முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

Happy Birthday Umesh Yadav: பாதியில் நின்ற கல்வி.. நிலக்கரி சுரங்கத்தில் வேலை.. இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம் பிடித்த கதை!
உமேஷ் யாதவ் (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 29 Oct 2024 17:45 PM

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உமேஷ் யாதவின் வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சாளர் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலரும் திணறியுள்ளனர். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உமேஷ் யாதவை இன்று தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும், இரு காலத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்தார்.

ALSO READ: IND vs NZ: ஸ்டேடியத்தில் தண்ணீர் பற்றாக்குறை.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மன்னிப்பு கேட்ட நிர்வாகம்!

பிறப்பு மற்றும் குடும்பம்:

உமேஷ் யாதவ் கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காபர்கெடா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இந்த கிராமத்தில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்பவர்களே அதிகம். இதன் காரணமாக, உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து, தனது குடும்பத்தை காப்பாற்றினார். இதையடுத்து, உமேஷ் யாதவின் குழந்தை பருவம் விளையாட்டு வசதிகள் குறைவாக இருந்த கிராமப்புற சூழலில் கழிந்தது. இருப்பினும், உமேஷ் யாதவிற்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது நாட்டம் அதிகமாக இருந்தது.

உமேஷ் யாதவ் தனது ஆரம்ப கல்வியை தனது கிராமத்தில் உள்ள பள்ளியில் முடித்தார். பள்ளி படிப்பை முடித்த பிறகு, உமேஷ் யாதவ் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக, அவரால் கல்லூரி படிப்பை முடிக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்றும், விளையாட்டிதான் கவனம் செலுத்த போவதாகவும் தெரிவித்து, தானாகவே கல்லூரியில் இருந்து விலகினார்.

உமேஷின் நல்ல உடலமைப்பு காரணமாக, அவர் போலீஸ் அல்லது ராணுவ வீரராக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். இதையடுத்து, கல்வி எதிர்பார்த்தபடி அமையாததால் தந்தையின் கனவை நிறைவேற்ற பல அரசு வேலைகளுக்கு முயற்சி செய்தார். காவல்துறை மற்றும் இராணுவத்தில் சேர முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இந்த காலகட்டத்தில்தான், உமேஷ் யாதவுக்கு கிரிக்கெட் மீதான காதல் மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து தனது வாழ்க்கையை கிரிக்கெட்டிற்கு அர்பணிக்க தொடங்கினார்.

கிரிக்கெட் வாழ்க்கை:

தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிய அவர், பின்னர் லெதர் பால் கிரிக்கெட்டுக்கு மாறினார். உமேஷின் கிரிக்கெட் செலவுக்கு அவரது தந்தை பணம் கொடுக்கவில்லை. உமேஷ் யாதவ் நிலக்கரி சுரங்கத்தில் பார்க்கும் வேலையில் கிடைக்கும் சம்பளத்தை குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு, மீதம் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயையும் சேமித்து லெதர் பந்தை வாங்கி அதில் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். இப்படியாக படிப்படியாக உயர்ந்து விதர்பா அணியில் இடம் பிடித்தார்.

2008-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் விளையாட உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது. போட்டியின் முதல் இன்னிங்ஸில், உமேஷ் யாதவ் 75 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இவரது கடின உழைப்பு மற்றும் வேகப்பந்து வீச்சு அவருக்கு உள்ளூர் மட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் விளையாடும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட உமேஷ் யாதவ், 2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார்.

அறிமுகம்:

2010ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான உமேஷ் யாதவ், தனது முதல் போட்டியிலேயே தனது வேகத்தால் அனைவரையும் கவர்ந்தார். 2011ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி டி20 போட்டியிலும் அறிமுகமானார். தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.

ALSO READ: Watch Video: என்னை நம்புங்கள்! இட்ஸ் அவுட்.. ரோஹித் சர்மாவிடம் வாதிட்ட சர்பராஸ் கான்..!

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

உமேஷ் யாதவ் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். உமேஷ் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளும், 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், உமேஷ் யாதவ் போட்டியின் முடிவில் பல சிக்ஸர்களை அடிப்பதில் பெயர் பெற்றவர்.

Latest News