Hardik: சொந்த ஊரில் கிடைத்த வரவேற்ப்பை கண்டு மகிழ்ந்த ஹர்திக் பாண்டியா .. வீடியோ பதிவிட்டு நெகிழ்ச்சி..!
உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாகவும், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடனான போட்டியில் வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தவருமான இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊர் மக்கள் மிகப்பெரிய வரவேற்ப்பை அளித்துள்ளனர். அங்கு சாலை மார்க்கமாக திறந்தவெளி பேருந்தில் வடோதராவிற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 17 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
Also Read: Hardik Pandiya: என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளையாட்டு மூலம் பதிலளித்தேன் – ஹர்திக்
தென்னாப்பிரிக்க அணிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது. இந்திய அணி கோப்பையை வெல்ல கடைசி ஓவரில் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஹர்திக் பாண்டிவை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வெற்றிக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு இந்திய பிரதமர் மோடி நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டினார். மேலும், பிசிசிஐ சார்பில் மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இந்திய அணிக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Olympic Logo: ஒலிம்பிக்கில் 5 வளையங்கள் மட்டும் ஏன்? அவற்றின் அர்த்தம் என்ன?
உலக கோப்பையை வென்ற கையுடன் இந்திய அணியின் குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வடோதராவிற்கு சென்றுள்ளார். அங்கு திறந்த வெளி பேருந்தில், ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நடந்த ரோட் ஷோவில் எக்கச்சக்கமான மக்கள் கலந்து கொண்டு கிரிக்கெட் நாயகன் பாண்டியாவை அன்போடு வரவேற்றனர். இது குறித்த வீடியோவை தன்னுடை சமூக வலைதளப்பக்கமான எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ள ஹர்திக் பாண்டியா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரின் அன்புக்கும் பரோடாவிற்கும், ரசிகர்களின் ஆதரவிற்கும், இந்த நாளை இவ்வளவு சிறப்பான நாளாக மாற்றியதற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், பல உணர்வுகளை மக்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார். ஹர்திக் வெளியிட்டுள்ள வீடியோவில், பறந்து வந்த பந்தை அழகாக கேட்ச் செய்யும் ஹர்திக்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Surreal ❤️ Thank you for all the love Baroda, thank you for the support and thank you for making this such a special day. So many emotions, but always grateful. 🙏🇮🇳 pic.twitter.com/PJ12bBUnjH
— hardik pandya (@hardikpandya7) July 16, 2024