Vinesh Phogat : வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் மேல்முறையீடு.. இன்று தீர்ப்பு!
Indian Wrestler | அரையிறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னெலிஸ் குஸ்மானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் உஸ்னெலிஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 : உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. கடந்த கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் உலகம் முழுவது உள்ள ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், காலிறுதிக்கான முந்தைய சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தக்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை யூ சசாகியை வீழ்த்தினார். காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்சானா லிவாச் என்பரை எதிர்க்கொண்டார். இதிலும் அடித்து தூள் கிளப்பிய வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அறையிறுதிக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க : Vakbu Variyam : இன்று தாக்கலாகிறது வக்பு வாரிய சட்ட மசோதா.. அதிகாரங்கள் பறிக்கப்படுமா?
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் – என்ன காரணம்?
அரையிறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னெலிஸ் குஸ்மானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் உஸ்னெலிஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தி இந்தியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டிகளில் அசத்தலாக விளையாடி, இறுதி போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், எப்படியேனும் தங்க பதக்கம் வென்றுவிடுவார் என இந்தியர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் ஏமாற்றத்தை தந்தது.
இதையும் படிங்க : Vinesh Phogat : மல்யுத்தத்தில் இருந்து விலகினார் வினேஷ் போகத்.. இனியும் விளையாட எந்த வலியும் இல்லை என ஆதங்கம்!
வினேஷ் போகத் மேல்முறையீடு – இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு
இந்நிலையில் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் தான் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்நிலையில் அவரின் மேல்முறையீடு மீது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதற்கிடையே வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் இனியும் போட்டிகளில் விளையாட தனக்கு எந்த வலியும் இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.