Viral Video: மனசிலாயோ பாடலுக்கு மாஸ் நடனம்.. குடும்பத்துடன் கலக்கிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!

D Gukesh: 2019ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி குகேஷ் தனது 12 வயது 7 மாதங்கள், 17 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம், மிக இளம் வயத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது இளைஞர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். மேலும், 2700 செஸ் மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது இளையவர், கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற இளையவர், மிக இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இளைஞர் என்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார் குகேஷ்.

Viral Video: மனசிலாயோ பாடலுக்கு மாஸ் நடனம்.. குடும்பத்துடன் கலக்கிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!

குகேஷ் நடனம்

Published: 

01 Oct 2024 12:35 PM

இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சமீபத்தில் புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 10 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று, செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்தநிலையில், குகேஷ் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலுக்கு அவரும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கலுடன் நடனமாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது, இது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

ALSO READ: Viral Video: வழிகாட்டி பலகை மீது ஏறி உடற்பயிற்சி.. நெடுஞ்சாலையில் இளைஞர் விபரீதம்!

வீடியோ வைரல்:

புடாபெஸ்டில் சாம்பியன் பட்டம் வென்றபிறகு இந்தியா திரும்பிய குகேஷ் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை கவரும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சிவப்பு நிற குர்தா, வேஷ்டி மற்றும் சன்கிளாஸ் அணிந்து, பிரபல ரஜினிகாந்த் பாடலான ‘மனசிலாயோ’ பாடலுக்கு ஹூக் ஸ்டெப்களை போட்டார். இதை பார்த்த இந்திய ரசிகர்கள் குகேஷை கமெண்ட் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.

குகேஷ் இதுவரை படைத்த சாதனைகள்:

டி குகேஷ் என்று அழைக்கப்படும் தொம்மராஜூ குகேஷ் ஒரு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் சென்னையில் கடந்த 2006ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். இவர்களது குடும்பம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோதாவரியை சேர்ந்தவர்கள். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். குகேஷின் தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளராக உள்ளார்.

செஸ் வாழ்க்கை:

குகேஷ் கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டமும், 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதே ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய இளையோர் சதுரங்க போட்டியில் தனிநபர் உள்ளிட்ட பிரிவுகளில் 5 தங்க பதக்கங்களை வென்றார்.

ALSO READ: Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

2019ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி குகேஷ் தனது 12 வயது 7 மாதங்கள், 17 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம், மிக இளம் வயத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது இளைஞர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். மேலும், 2700 செஸ் மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது இளையவர், கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற இளையவர், மிக இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இளைஞர் என்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார் குகேஷ்.

FIDE லைவ் ரேட்டிங் பட்டியலில் குகேஷ் முன்னேற்றம்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மன் பண்டெஸ்லிகா 2024-25 போட்டியில் துருக்கி நாட்டை சேர்ந்த எடிஸ் குரேலியும், இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் எரிகைசியும் மோதினர். இந்த போட்டியில், எதிர்பாராதவிதமாக தோல்வியை சந்தித்த அர்ஜூன் எரிகைசி FIDE லைவ் ரேட்டிங் பட்டியலில் சரிவை சந்தித்தார். இந்திய தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அர்ஜூன், தோல்விக்கு பிறகு FIDE லைவ் ரேட்டிங் பட்டியலில் இரண்டு இடங்கள் கீழே தள்ளப்பட்டு 5வது இடத்திற்கு சரிந்தார். இதன் காரணமாக, செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பாக செயல்பட்ட குகேஷ் FIDE லைவ் ரேட்டிங் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார்.

FIDE லைவ் ரேட்டிங் பட்டியல்:

1. மேக்னஸ் கார்ல்சன் (NOR) – 2830.8
2. ஹிகாரு நகமுரா (USA) – 2802.0
3. ஃபேபியானோ கருவானா (USA) – 2795.8
4. டி குகேஷ் (IND) – 2794.1
5. அர்ஜுன் எரிகைசி (IND) – 2789.9

மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் FIDE லைவ் ரேட்டிங் பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் ஐந்து முறை முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2751.0 ரேட்டிங்குடன் 10வது இடத்தில் உள்ளார்.

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 13 வரை சிங்கப்பூரில் நடைபெறும். இதில், குகேஷ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரன்-ஐ குகேஷ் எதிர்கொள்கிறார்.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!