5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: ரிஷப் பண்ட் தூக்கி அடித்த பந்து.. டைவ் அடித்து பிடித்த கில்.. வைரலாகும் வீடியோ!

Shubman Gill Catch: இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் இன்று முதல் தொடங்கிய துலீப் டிராபியில் விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் களமிறங்கின. அப்போது இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில், இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் முதல் நாளில் ரிஷப் பண்ட் கேட்சை ஓடி சென்று டைவ் அடித்து பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch Video: ரிஷப் பண்ட் தூக்கி அடித்த பந்து.. டைவ் அடித்து பிடித்த கில்.. வைரலாகும் வீடியோ!
சுப்மன் கில் (Image: Gareth Copley/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 28 Oct 2024 12:41 PM

ரிஷப் பண்ட்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 4 மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முன்னதாக, இந்திய அணி தனது கடைசி டெஸ்ட் போட்டியை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விளையாடியது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி முதல் வங்கதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் இன்று முதல் தொடங்கிய துலீப் டிராபியில் விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் களமிறங்கின. அப்போது இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில், இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் முதல் நாளில் ரிஷப் பண்ட் கேட்சை ஓடி சென்று டைவ் அடித்து பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ: SCO vs AUS: ஸ்காட்லாந்தை ஆட்டம் காண வைத்த ஆஸ்திரேலியா! 9.4 ஓவர்களில் இலக்கை விரட்டி அசத்தல்!

7 ரன்னில் ரிஷப் பண்ட் அவுட்:

துலீப் டிராபியின் முதல் ஆட்டம் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது. நான்கு நாள் நடைபெறும் இந்த போட்டியில் சுப்மன் கில் டாஸ் வென்று இந்தியா பி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி 67 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது. அதன்பின் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட் 9 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி உதவியுடன் 7 ரன்கள் எடுத்திருந்தார். தனது இன்னிங்ஸின் 10வது பந்தில் பெரிய ஷார் ஆட ரிஷப் பண்ட் முயற்சி செய்தார்.

ஆகாஷ் தீப்பின் பந்தில், பண்ட் மிட்-ஆஃப் மேலே பந்தை அடிக்க அது உயர பறந்தது. அப்போது, மிட் ஆஃப் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுப்மன் கில், பந்தை பார்த்ததும் பின்னோக்கி ஓடி பிடிக்க முயற்சி செய்தார். அப்போது, கீழே வந்த பந்து மிக தொலைவில் இருந்ததால் டைவ் அடிச்சு கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச்சை பார்த்து பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட் சிறிது நேரம் ஆச்சர்யமாக பார்த்து 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ALSO READ: IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

இரண்டு ஆண்களுக்கு பிறகு..

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் காயம் அடைந்த பண்ட்டுக்கு இது முதல் தர போட்டியாகும். இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் களமிறங்குவதால் எப்படி விளையாடுவார் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், வெறும் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார் ரிஷப் பண்ட். இந்தியா பி அணிக்காக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்தியா பி அணியில் முஷீர் கான் மட்டுமே சதம் அடித்து போராடி வருகிறார். துலீப் டிராபியின் முதல் போட்டிக்குப் பிறகு, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கலாம். எனவே, இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறலாம்.

Latest News