Virat Kohli Birthday Special: ஒருநாள் போட்டிகளில் அதிக சதம்.. 3 ஐசிசி உயரிய விருதுகள்.. விராட் கோலியின் வாழ்நாள் சாதனைகள்!

Virat Kohli: கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் தனது 50வது சதத்தை பதிவுசெய்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை படைத்தார். இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

Virat Kohli Birthday Special: ஒருநாள் போட்டிகளில் அதிக சதம்.. 3 ஐசிசி உயரிய விருதுகள்.. விராட் கோலியின் வாழ்நாள் சாதனைகள்!

விராட் கோலி (Image: PTI & GETTY)

Updated On: 

05 Nov 2024 10:23 AM

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விராட் கோலியில் இருந்து ‘கிங்’ கோலியாக உருவெடுத்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் தனது 50வது சதத்தை பதிவுசெய்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை படைத்தார். இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தநிலையில், அவரது பிறந்தநாள், விராட் கோலி செய்த சிறப்பு சாதனைகளை பார்ப்போம்.

ALSO READ: Team India: இந்திய அணி அடுத்ததாக யாருடன் எப்போது மோதுகிறது? முழு விவரம் இங்கே!

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம்:

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 50 சதங்கள் உட்பட 13,906 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்கள் அடித்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

அதிவேக 13 ஆயிரம் ரன்கள்:

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது 278வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை கோலி பதிவு செய்தார். இந்த பட்டியலில் 321 ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கர் 2வது இடத்தில் உள்ளார்.

அதிவேக 1000 ரன்கள்:

ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். கடந்த 2018ம் ஆண்டு வெறும் 11 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து மிரட்டினார் விராட் கோலி. இதன்மூலம், 15 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்கா வீரர் ஹஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார் கோலி.

ஹாட்ரிக் சதங்கள்:

இரு அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக விராட் கோலி 133*, 108 மற்றும் 106 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக 140,157* மற்றும் 107 ரன்கள் குவித்தார்.

ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகள்:

ஒரே ஆண்டில் மூன்று மிகப்பெரிய ஐசிசி ஆண்டு விருதுகளை வென்ற உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே. கடந்த 2018ம் ஆண்டு அனைத்து வடிவத்திலும் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி, அந்த ஆண்டில் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி, ஐசிசி டெஸ்ட் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றார்.

அதிக அரைசதங்கள்:

கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய போதிலும், விராட் கோலி தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்கள் அடித்திருந்தார். இதன்மூலம், ஒரு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை படைத்தார். அந்த உலகக் கோப்பையில் விராட் கோலி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக முறையே 82, 77, 67, 72 மற்றும் 66 ரன்கள் எடுத்திருந்தார்.

ALSO READ: IPL 2025: தக்கவைத்த பிறகு எந்த அணியிடம் எவ்வளவு தொகை..? கல்லா கட்ட போகும் ஏலம்!

அதிக சதங்கள்:

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றிருந்தாலும், இந்த வடிவத்தில் அதிக அரைசதங்கள் அடித்தவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து 39 அரைசதங்கள் அடித்துள்ளார் விராட் கோலி.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!