Virat Kohli: உலக கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட்.. சோகத்தில் ரசிகர்கள்..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி, நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் சோகத்துடன் அமர்ந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவந்த விராட் கோலி, நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தன்னுடைய ஃபார்மை இழந்து தொடர்ந்து தடுமாறி வருகிறார். அதிரடியாக ஆடிவந்த விராட் தற்போது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது விராட் கோலியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் இருந்து நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டி வரையிலும் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மேலும், நேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, கண் கலங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: T20 World Cup Final: விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் – கேப்டன் ரோகித் கருத்து
விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். அவரது அதிரடியான ஆட்டத்திறன் இன்னும் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதையெல்லாம், இறுதிப்போட்டிக்காக விராட் கோலி பாதுகாத்து வைத்திருக்கிறார். விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருபவருக்கு ஃபார்ம் ஒரு சிக்கலே இல்லைஎன்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலக கோப்பை இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இந்த தொடரில் 1, 4, 0, 24, 37, 0, 9 என்ற சொற்ப ரன்களை பெற்று வருகிறார். டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்துள்ள வீரர், உலக கோப்பை தொடரின் மொத்த இன்னிங்ஸில் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பேட்டிங் செய்து வரும் விராட் கோலி இத்தொடரில் ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த
Also Read: IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.. இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு..?
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட்டின் ஆட்டம் குறித்து நாம் நன்றாக அறிவோம். சில நேரங்களில் இதில் நாம் எதிர்பார்த்தபடி ரன் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால், அரையிறுதி போராட்டத்தில் கூட அவர் அபார சிக்ஸரை விளாசினார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் ஆட்டமிழந்தார். அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும் என நினைப்பதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.