Virat kohli: விராட் கோலியின் புதிய சொகுசு வீடு வீடியோ.. இணையத்தில் வைரல்..! - Tamil News | virat kohli's mumbai new luxury home video viral on social media | TV9 Tamil

Virat kohli: விராட் கோலியின் புதிய சொகுசு வீடு வீடியோ.. இணையத்தில் வைரல்..!

Updated On: 

04 Oct 2024 09:04 AM

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான விராட் கோலி மும்பையில் பிரம்மாண்டமான சொகுசு வீடு ஒன்றை கட்டியுள்ளார். இது குறித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விராட் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா கடற்கரையில் அலிபாக் நகரில் கட்டியுள்ள விராட்டின் வீட்டை பார்த்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Virat kohli: விராட் கோலியின் புதிய சொகுசு வீடு வீடியோ.. இணையத்தில் வைரல்..!
Follow Us On

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில்  தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 17 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்தி அணி வென்று சாதனை புரிந்த நிலையில், உலக கோப்பையை இந்தியா வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். விராட் கோலி ஓய்வை அறிவித்த நிலையில் வெளிநாட்டில் செட்டில் ஆக போவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வகிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் கடற்கரை ஓரத்தில் அலிபாக் நகரத்தில், விராட் கோலி தான் கட்டி உள்ள பிரம்மாண்ட வீடு குறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read: Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம்… ஜெய்ஷா அறிவிப்பு

விராட் கோலியின் இந்த சொகுசு வீடானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வீட்டின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. நாங்கள் கட்டியுள்ள இந்த அலிபாக் வீட்டில் தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்றதாகவும், தற்போது அந்த வீட்டில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விராட் கோலி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டிற்கு உயிர் கொடுத்த அவாஸ் குழுமத்திற்கும் நன்றியை தெரிவித்துள்ள விராட் கோலி, இந்த வீட்டில் எனக்கு பிரியமானவர்களுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நான் அனுபவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Aslo Read: ZIM Vs IND: அபிஷேக் சர்மா சதத்தால் பெருமைக்கொண்ட யுவராஜ்சிங்..!

இந்த வீட்டில் அமைந்துள்ள அனைத்து அம்சங்களும் தனித்துவமாக காணப்படுகிறது. வெக்கேஷனுக்கு சிறந்த கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் அனைத்து அம்சங்களும் நிறைந்து நான் எதிர்பார்த்ததை விட அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இங்கு லிவிங் ஸ்பேஸ் எனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறிய விராட் கோலி, இயற்கை சார்ந்து இயற்கையின் வெளிச்சம் வீட்டிற்குள் வருகிறது. இந்த வீட்டில் எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்று வீடியோவில் விராட் கோலி பேசியுள்ளார்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version