5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aaryavir Sehwag: 3 ரன்களில் தவறிய முச்சதம்.. அப்பாவை போன்று அட்டாக் மோடில் சேவாக் மகன்..!

Virender Sehwag: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேவாக் இந்திய அணிக்காக அதிகபட்சமாக 319 ரன்கள் குவித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சாதனையை தனது மகன் நடைபெற்று வரும் கூச் பெஹர் டிராபி முறியடித்தால் ஃபெராரி கார் வாங்கி தருவதாக சேவாக் அறிவித்திருந்தார். ஆனால், 23 ரன்களில் அப்பாவின் சாதனையை ஆர்யவீர் சேவாக் அடிக்க தவறினார்.

Aaryavir Sehwag: 3 ரன்களில் தவறிய முச்சதம்.. அப்பாவை போன்று அட்டாக் மோடில் சேவாக் மகன்..!
ஆர்யவீர் சேவாக் (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2024 21:28 PM

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கவனம் பெற்று, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். அப்படி, நாம் ரசித்த ஒரு சில கிரிக்கெட் வீரர்களின் மகன்களும் இப்போது கிரிக்கெட் உலகை ஆள தொடங்கி விட்டனர். அந்தவரிசையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் என வரிசை கட்டு வரும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக்கும் இணைந்துள்ளார். கடந்த மாதம்தான் டெல்லி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்த ஆர்யவீர், தற்போது கூச் பெஹர் டிராபியில் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் மேகாலயாவுக்கு எதிராக டெல்லி அணிக்காக இரட்டை சதம் அடித்து அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார்.

ALSO READ: IND vs AUS: ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்.. சொதப்பிய பேட்டிங்.. கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்!

இரட்டை சதம் அடித்த சேவாக் மகன்:

ஷில்லாங்கில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் கூச் பெஹர் டிராபியில் மேகாலயாவுக்கு எதிராக ஆர்யவிர் சேவாக் தனது இன்னிங்ஸில் 309 பந்துகளை சந்தித்து 51 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 297 ரன்களை குவித்தார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் வினூ மன்கட் டிராபியில் அறிமுகமான ஆர்யவீர், மணிப்பூருக்கு எதிரான 49 ரன்கள் எடுத்து தனது அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார்.

டெல்லி அணி அபாரம்:

கூச் பெஹர் டிராபியில் மேகாலயா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 104.3 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யவீர் சேவாக் மற்றும் அர்னவ் புக்கா களமிறங்கினார். இருவரும் சிறப்பாக விளையாடி டெல்லி அணியின் ஸ்கோர் எண்ணிக்கையை உயர்த்தினர். தொடக்க வீரராக களமிறங்கிய அர்னவ் புக்கா சதன் அடித்து 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்திருந்தனர். இதையடுத்து, ஆர்யவீர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த இரு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் எடுத்து 208 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்றும் சூப்பராக விளையாடிய ஆர்யவீர் முச்சதத்தை தவறவிட்டார். 3 ரன்கள் ஓட முயற்சித்து ஆட்டமிழந்தார் ஆர்யவீர். இன்னும் 3 ரன்கள் எடுத்திருந்தால் முதல் தர போட்டியில் தனது முதல் டிரிபிள் செஞ்சுரியை பதிவு செய்து இருப்பார். இதன் தொடர்ச்சியாக, டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 623 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.

ALSO READ: IND vs AUS: சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அவுட்டான கே.எல்.ராகுல்.. சமூக வலைதளங்களில் பொங்கும் ரசிகர்கள்..!

சேவாக் ட்வீட் மூலம் வாழ்த்து:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேவாக் இந்திய அணிக்காக அதிகபட்சமாக 319 ரன்கள் குவித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சாதனையை தனது மகன் நடைபெற்று வரும் கூச் பெஹர் டிராபி முறியடித்தால் ஃபெராரி கார் வாங்கி தருவதாக சேவாக் அறிவித்திருந்தார். ஆனால், 23 ரன்களில் அப்பாவின் சாதனையை ஆர்யவீர் சேவாக் அடிக்க தவறினார். இதுகுறித்து ட்வீட் செய்த சேவாக், “நன்றாக விளையாடினீர்கள் ஆர்யவீர். 23 ரன்கள் வித்தியாசத்தில் ஃபெராரி காரை இழந்தீர்கள். இந்த தீயை எப்போது அணையாமல் பார்த்து கொள்ளுங்கள், அப்பாவை போன்று அதிக டவுள் செஞ்சுரிகளும், டிரிப்பிள் சஞ்சுரிகளும் அடியுங்கள்” என தெரிவித்திருந்தார்.

 

Latest News