Washington Sundar Birthday Special: காது கேளாமை.. சிறுவயதில் வாட்டிய வறுமை.. ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தரின் பயணம்..!
Washington Sundar Profile: வாஷிங்டன் சுந்தர் தனது ஆரம்ப கல்வியை செயிண்ட் பேட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் படித்தார். அதன்பிறகு, தனது வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்தார். வாஷிங்டன் சுந்தரின் தந்தை சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஊக்குவித்து வந்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடியபோது அவருக்கு 4 வயதுதான். அப்போது, ஒரு பெரிய விஷயம் கவனிக்கப்பட்டது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிக இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர், சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். இந்தநிலையில், விரைவில் தொடங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் முதன்முதலில் கடந்த 2016ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடினார். இங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டே இந்திய அணியில் இடம் பிடித்தார்.
யார் இந்த வாஷிங்டன் சுந்தர்..?
வாஷிங்டன் சுந்தர் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்தார். வாஷிங்டன் சுந்தரின் தந்தை பெயர் மணி சுந்தர். இவர் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பைகளில் விளையாடியுள்ளார். வாஷிங்டன் சுந்தரின் அக்கா ஷைலஜா சுந்தரும் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் சுந்தர் ஆரம்ப வாழ்க்கை:
வாஷிங்டன் சுந்தர் தனது ஆரம்ப கல்வியை செயிண்ட் பேட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் படித்தார். அதன்பிறகு, தனது வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்தார். வாஷிங்டன் சுந்தரின் தந்தை சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஊக்குவித்து வந்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடியபோது அவருக்கு 4 வயதுதான். அப்போது, ஒரு பெரிய விஷயம் கவனிக்கப்பட்டது.
சிறுவயது முதலே வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு காதில் மட்டுமே கேட்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. இப்போது வரை வாஷிங்டன் சுந்தருக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், ஒருபோதும் மனமுடையாத வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். தொடர்ந்து, தந்தையிடம் இருந்து வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 2016ம் ஆண்டு ரஞ்சி கோப்பைக்கான தமிழ்நாடு அணியில் இடம் பிடித்தார்.
வாஷிங்டன் சுந்தரின் பெயர் காரணம்:
உண்மையாக வாஷிங்டன் நகருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாஷிங்டன் சுந்தரின் தந்தை மணி சுந்தருக்கும், முன்னாள் ராணுவ வீரருக்கும் நல்ல நட்பு ஒன்று உருவாகியுள்ளார். அந்த முன்னாள் வீரருக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். தினமும் மெரினா கடற்கரையில் வாஷிங்டன் சுந்தரின் தந்தையின் ஆட்டத்தை பார்க்க வருவாராம். அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மணி சுந்தரின் குடும்ப வறுமைக்கு உதவும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும், வாஷிங்டன் சுந்தரின் படிப்பு மற்றும் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அந்த முன்னாள் ராணுவ வீரர் உதவி செய்துள்ளார். அவரின் பெயர் பிடி வாஷிங்டன். அவரின் நினைவாகவே வாஷிங்டன் சுந்தருக்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் :
வாஷிங்டன் சுந்தர் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தமிழ்நாட்டிற்காக தனது முதல் முதல் தர போட்டியில் விளையாடினார். 2016-17 ரஞ்சி டிராபி சீசனில் தமிழ்நாடு அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 532 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், 30 விக்கெட்களையும் வீழ்த்தினார். 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஞ்சி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். 2016ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.
2027ம் ஆண்டு ஐபிஎல்லில் அடியெடுத்து வைத்த வாஷிங்டன் சுந்தர் இதுவரை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக இதுவரை 4 டெஸ்ட், 22 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 265 ரன்களுடன் 6 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 315 ரன்களுடன் 23 விக்கெட்டுகளையும், டி20யில் 160 ரன்களுடன் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடினார். 2017 ஆம் ஆண்டிலேயே, அவர் டிசம்பர் 13 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஜனவரி 2021 இல் பிரிஸ்பேனில் நடந்த புகழ்பெற்ற காபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் இந்தியாவுக்காக தனது டெஸ்ட் அறிமுகமானார். இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமல்லாமல், முதல் இன்னிங்ஸில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்தார்.