Viral Video: கிரிக்கெட் போதும்! பேட்மிண்டனில் பட்டையை கிளப்பிய தோனி.. வைரலாகும் வீடியோ! - Tamil News | Watch Video: Former Indian Captain MS Dhoni serves flying smash badminton its on viral | TV9 Tamil

Viral Video: கிரிக்கெட் போதும்! பேட்மிண்டனில் பட்டையை கிளப்பிய தோனி.. வைரலாகும் வீடியோ!

Updated On: 

25 Sep 2024 09:01 AM

MS Dhoni: கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக தோனி, ஒவ்வொரு போட்டிகளிலும் களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் ஸ்டேடியத்தை அதிர செய்கிறது. இதையடுத்து, வருகின்ற ஐபிஎல் 2025ம் ஆண்டு தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தோனியின் உடற்தகுதியும் அந்த அளவிற்கு சிறப்பாகவே உள்ளது. தோனிக்கு விளையாட்டு மீதான காதல் இன்னும் குறையவில்லை.

Viral Video: கிரிக்கெட் போதும்! பேட்மிண்டனில் பட்டையை கிளப்பிய தோனி.. வைரலாகும் வீடியோ!

எம்.எஸ்.தோனி

Follow Us On

எம்.எஸ்.தோனி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவரா இல்லையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் மீது ரசிகர்கள் வைத்த காதல் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக தோனி, ஒவ்வொரு போட்டிகளிலும் களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் ஸ்டேடியத்தை அதிர செய்கிறது. இதையடுத்து, வருகின்ற ஐபிஎல் 2025ம் ஆண்டு தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தோனியின் உடற்தகுதியும் அந்த அளவிற்கு சிறப்பாகவே உள்ளது. தோனிக்கு விளையாட்டு மீதான காதல் இன்னும் குறையவில்லை.

ALSO READ: IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!

மார்ச் முதல் மே வரை கிரிக்கெட் விளையாடும் தோனி, பிற மாதங்களில் மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தோனி தனது சொந்த ஊரான ஜார்கண்டில் டென்னிஸும், அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்களுடன் கோல்ஃப் விளையாடிய வீடியோக்கள் சமீபத்தில் வைரலானது. இந்தநிலையில், எம்.எஸ்.தோனி தற்போது பேட்மிண்டன் விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி உடற்தகுதி எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. தோனியின் வயது ஏற ஏற, அவரது உடற்தகுதிக்காக கடுமையாக உயற்பயிற்சி செய்து வருகிறார். வெளியான வீடியோவில், எம்.எஸ்.தோனி அதிவேகமாக பேட்மிண்டன் ஷாட் அடித்தார். இதை எதிர்கொள்ள முடியாமல் எதிரே விளையாடிய வீரர்கள் திணறினர். இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனில் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார். அதன்பிறகு, சிகிச்சை பெற்றுக்கொண்ட எம்.எஸ்.தோனி தற்போது தனது உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார்.

தோனி சந்திப்பு:

அடக்கமான இயல்புக்கு பெயர் பெற்ற எம்.எஸ்.தோனி, ராஞ்சியில் உள்ள உள்ளூர் தாபாவில் தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட்டார். அந்த புகைப்படமும் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தோனியும் அவர்களது நண்பர்களுக்கும் இடையிலான பந்தத்தை வெளிப்படுத்தியது.

ALSO READ: Health Tips: உடலுக்கு அற்புத பலன் தரும் திராட்சை தண்ணீர்.. ஒரு மாதம் உட்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

ஐபிஎல் 2025ல் தோனி பங்கேற்பாரா..?

தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது. ஐபிஎல் விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர், அன் கேப் பிளேயராக களமிறங்கலாம் என்று இருந்தது. ஆனால், இந்த விதி கடந்த 2021ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விதி குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தார்.

Related Stories
SL vs NZ 2nd Test Highlights: வெற்றிக்காக 15 வருட காத்திருப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இலங்கை அணி!
IND vs BAN T20 Squad: புதுமுகமாக உள்ளே வந்த மயங்க் யாதவ்.. வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு..!
IPL Retention Rule Explainer: ஐபிஎல் 2025ல் எத்தனை வீரர்கள் தக்க வைக்கலாம்..? என்னென்ன புதிய விதிகள் அறிமுகம்..? முழு விவரம் இங்கே!
Musheer Khan Car Accident: சாலை விபத்தில் தந்தையுடன் சிக்கிய முஷீர் கான்.. சிகிச்சை தர மும்பை கொண்டுபோகும் பிசிசிஐ!
On This Day in 2018: வலியுடன் கடைசி வரை போராடிய கேதர் ஜாதவ்.. 6 ஆண்டுக்குமுன் இதே நாளில் இந்திய அணி ஆசிய சாம்பியன்!
IND vs BAN 2nd Test Day 2: இந்தியா vs வங்கதேச டெஸ்டின் 2வது நாள் ரத்தா..? போட்டிக்கு நடுவே மழை ஆடப்போகும் ஆட்டம்!
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version