Olympic Logo: ஒலிம்பிக்கில் 5 வளையங்கள் மட்டும் ஏன்? அவற்றின் அர்த்தம் என்ன?
Olympics History: ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கின்றன. இதில் ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் ஒரே கண்டமாக கணக்கிடப்பட்டுள்ளன.
விளையாட்டு போட்டிகளில் மகா சங்கமம் என்று ஒலிம்பிக் போட்டிகள் அழைக்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் மிகப்பெரிய கனவு. இந்தநிலையில், இந்த ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்ப்க் 2024க்கான ஏற்பாடுகள் உலகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதில் சுமார் 10 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 1896 இல் தொடங்கி நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 5 வட்ட வளையங்களை மட்டுமே ஒலிம்பிக்கின் லோகோவாக பார்த்து வருகிறோம். ஒலிம்பிக் கொடியில் உள்ள இந்த ஐந்து வளையங்களின் அர்த்தம் வெகு சிலருக்கே தெரியும். இந்த வளையங்கள் எதைக் குறிக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
5 வளையங்கள்:
இடமிருந்து வலமாக வரிசையில் உள்ள இந்த 5 வளையங்களின் நிறங்கள் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகும். இந்த வளையங்கள் ஒரே அளவில் இருந்தாலும், அவற்றில் நிறங்கள் வேறுபட்டவை. இந்த 5 மோதிரங்கள் ஒலிம்பிக் போட்டியின் சின்னங்கள். இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கின்றன. இதில் ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் ஒரே கண்டமாக கணக்கிடப்பட்டுள்ளன.
Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த இரு நாடுகள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?
இவற்றில், நீல நிற வளையம் ஐரோப்பாவிற்கும், மஞ்சள் நிறம் ஆசியாவிற்கும், கருப்பு நிறம் ஆப்பிரிக்காவிற்கும், பச்சை நிறம் ஆஸ்திரேலியாவிற்கும், சிவப்பு நிறம் அமெரிக்காவின் அடையாளமாகவும் உள்ளது. ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, அது பின்தங்கிய மற்றும் ஏழை என்பதால் கருப்பு நிற குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வண்ணங்கள் அனைத்தும் உலகின் அனைத்து நாடுகளின் கொடிகளிலும் காணப்படுகின்றன. அனைத்து நாடுகளின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேண இந்த 5 நிறங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த ஐந்து வளையங்களும் உலகெங்கிலும் இருந்து விளையாட்டுகளில் பங்கேற்க வரும் விளையாட்டு வீரர்களையும் குறிக்கின்றன.
ஒலிம்பிக் சின்னத்தை உருவாக்கியவர் யார்..?
இந்த 5 வளையங்கள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOC) முன்னாள் தலைவரான பியர் டு கூபர்டின் (Pierre du Coubertin) என்பவரால் 1912ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இவை 1913ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று வரை அசைக்கமுடியாத சின்னமாக உள்ளது.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளின் குறிக்கோள் மூன்று லத்தீன் வார்த்தைகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் Citius, Alcius, Fortius. அவற்றிற்கு வேகமானது, உயர்ந்தது மற்றும் தைரியமானது என்று பொருள். உலகப் போரின் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 1914ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1920ம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது முதன்முறையாக சின்னம் மற்றும் கொடி பயன்படுத்தபட்டது.