திறமையை நிரூபித்து கொண்டே இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை – முகமது ஷமி ஆதங்கம்
இந்திய வீரர் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனக்கு இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முகமது ஷமிக்கு டி20 அணியில் காயம் காரணமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது காயத்திலிருது மீண்டுள்ள முகமது ஷமிக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது குறித்து அவர் பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் நெறியாளரின் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக 2019 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பாக, அவரது விளையாட்டு அனுபவங்கள் தொடர்பான கேள்விகளுக்கு முகமது ஷமி அளித்த பதில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் முகமது ஷமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதில் முகமது ஷமி கூறியுள்ளதாவது, நான் காயமடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறிய பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அதன் பிறகு தற்போது வரை பல மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். ஆனால், இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இரண்டு நபர்கள்தான் தொடர்ச்சியாக எனக்கு போன் செய்து என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தனர். அவர்கள் இருவரையும் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று சொல்லுவேன் பெருமையுடன் கூறியுள்ளார்.
நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவை. மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்னிடம் கேள்விகளும் இல்லை பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் நான் விளையாடவில்லை. பின்னர் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அடுத்தடுத்த போட்டிகளில் பல விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். அதிலும், குறிப்பாக 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய என்னிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று தெரியவில்லை. ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிரூபிக்க முடியும். ஆனாலும் எனக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
Also Read: Olympics History: ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன..?
கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி முகமது ஷமிக்கு ஆரம்பத்தில் எந்த வாய்ப்பு வழங்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக வெளியேறிய நிலையில், மாற்று வீரராக களமிறங்கிய ஷமிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திய ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய ஷமி பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் எந்த வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே உண்மை என்ற நிலையில் ஷமியின் கருத்து பிசிசிஐக்கு எதிராக ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.