5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dhoni : தோனிக்கு இடுப்பில் என்ன பிரச்னை? மருத்துவ பெல்ட் அணிந்த புகைப்படம் வைரல்.!

IPL 2024 : சென்னை அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனிக்கு கனுக்கால் பிரச்சினை மட்டுமில்லாமல், தற்போது முதுகில் பிரச்சினை இருப்பதால், முதுகில் பெல்ட் அணிந்திருக்கும் தோனி புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Dhoni : தோனிக்கு இடுப்பில் என்ன பிரச்னை? மருத்துவ பெல்ட் அணிந்த புகைப்படம் வைரல்.!
intern
Tamil TV9 | Updated On: 13 May 2024 13:26 PM

நடப்பு 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாகவும், நேற்று சென்னையில் ராஜஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டி கடைசி என்று கூறப்பட்ட நிலையில் தோனி அடுத்த சீசனும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனிக்கு முதுகில் பிரச்சினை இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ் தோனி கடந்த சீசன் வரையிலும் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் இருந்து வந்தார். நடப்பு சீசனில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி ருத்துராஜ் கெய்க்வாட்டை கைக்காட்டிய தோனியின் முடிவை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும், நடப்பு ஐபிஎல் சீசன் தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் இந்த தொடர் முழுவதும் தோனி சிங்கில் எடுக்க ஓடுவதை தவிர்த்து வந்தார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்த தொடர் முடிந்தவுடன் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து அவர் ஓரளவு மீண்டு வந்தாலும் அவருக்கு இன்னும் முழங்காலில் தசை நார் கிழிசல் இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும், முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தோனி நேற்றைய போட்டியில், முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். பெல்ட் அணிந்து இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது.

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா? களைகட்டும் சேப்பாக்கம் மைதானம்!

சிஎஸ்கே அணி பேட்டிங்கின் போது கிரிக்கெட் வீரர்களின் ஓய்வறையில், தோனி அணிந்திருந்த பெல்ட்டை மேல்புறமாக அணிந்திருந்தார். இதன் மூலம் அவருக்கு கடுமையான முதுகு வலி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், தோனி ஓய்வு எடுக்காமல் சென்னை அணிக்காக தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

பொதுவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு சிலருக்கு முதுகு வலி அல்லது இடுப்பு வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதிக வலி ஏற்படும் போது இந்த பெல்ட்டை அணிந்து கொள்வார்கள். தற்போது சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் இல்லாததால் மட்டுமே தோனி விளையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. தோனி சிஎஸ்கே அணியை மட்டும் பாராமல், தனது உடல்நிலையை பேணிக்காக்க வேண்டும் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம் தோனி மேலும் ஒரு சீசன் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அன்பு கட்டளை விதித்து வருகின்றனர்.

Latest News