Tamil NewsSports > When Will Neeraj Chopra Compete At Paris Olympics 2024 full details here
Neeraj Chopra: ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா எப்போது களமிறங்குகிறார்..? முழு விவரம் இதோ..!
Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் வேண்டுமென்றால் அதற்கு ஒரே நம்பிக்கையாக இருப்பவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மட்டுமே. கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை எப்போது களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 06 ஆம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் பங்கேற்கிறார்.
நீரஜ் சோப்ரா
2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
இரண்டுமே வெண்கல பதக்கம் என்பதால் இந்தியாவிற்கு தங்கம் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கு தங்க பதக்கம் வேண்டுமென்றால் அதற்கு ஒரே நம்பிக்கையாக இருப்பவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மட்டுமே.
கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை எப்போது களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த போட்டிக்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 06 ஆம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் பங்கேற்கிறார். குரூப்-ஏ பிரிவுக்கான தகுதிச் சுற்றில் மதியம் 1:50 மணிக்கும், குரூப்-பி தகுதிச் சுற்றில் பிற்பகல் 3:20 மணிக்கும் களமிறங்குகிறார்.
இந்த இரண்டு தகுதிச் சுற்றிலும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றால், வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் களமிறங்குவார். நீரஜ் சோப்ராவிடம் இருந்து இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்தாண்டு மீண்டும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.