5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Olympics History: ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன..?

Olympics 2024: ஒலிம்பிக் போட்டிகள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய கிரேக்கத்தில் தொடங்கி சில ஆண்டுகாலம் நடைபெற்றது. அதன்பின் மீண்டும் கடந்த 1896ம் ஆண்டு ஏதென்ஸில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இன்று வரை விளையாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இங்கிருந்துதான் உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டியாக ஒலிம்பிக் மாறியது.

Olympics History: ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன..?
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 26 Jul 2024 12:50 PM

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் 2024 போட்டிகள் வருகின்ற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை பாரிஸ் நகரத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவாகும். இந்த பிரமாண்ட போட்டியில் உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இதன் காரணமாக, ஒரு போட்டியில் வெற்றிபெற்று தங்க பதக்கத்தை வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்தநிலையில் ஒலிம்பிக் போட்டிகள் எப்போது தொடங்கியது? இந்த விளையாட்டு போட்டிகள் எப்போது முதன்முறையாக விளையாடப்பட்டன என்று உங்களுக்கு தெரியுமா. இது தவிர, ‘ஒலிம்பிக்ஸ்’ என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

‘ஒலிம்பிக்ஸ்’ என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?

‘ஒலிம்பிக்ஸ்’ என்ற வார்த்தை நாம் அனைவரும் மிக நீண்ட ஆண்டுகாலமாக கேள்விப்பட்டு வருகிறோம். ஜீயஸ் மகன் ஹெர்குலஸ்தான் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நிறுவினார் என்று புராணக்கதை கூறுகிறது. இது கிமு 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிரேக்கத்தில் மிகப்பெரிய புகழைப் பெற்றது என்றும் கூறப்படுகிறது. அதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை, ஜியஸ் கடவுளின் நினைவாக மேற்கு பெலோபொன்னீஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாகவே, ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒலிம்பியா மற்றும் ஒலிம்பிக்ஸ் என்று பெயர் வந்தது. ஒலிம்பியா என்பது தெற்கு கிரேக்கத்தில் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு புனித தளமாகும்.

ALSO READ: Olympic Logo: ஒலிம்பிக்கில் 5 வளையங்கள் மட்டும் ஏன்? அவற்றின் அர்த்தம் என்ன?

ஒலிம்பிக் போட்டிகள் எப்போது தொடங்கியது?

ஒலிம்பிக் போட்டிகள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய கிரேக்கத்தில் தொடங்கி சில ஆண்டுகாலம் நடைபெற்றது. அதன்பின் மீண்டும் கடந்த 1896ம் ஆண்டு ஏதென்ஸில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இன்று வரை விளையாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இங்கிருந்துதான் உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டியாக ஒலிம்பிக் மாறியது. இந்த விளையாட்டுகள் 1894 இல் பிரான்சின் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOC) முன்னாள் தலைவரான பியர் டு கூபர்டின் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. பின்னர், முதல் முறையாக, நவீன ஒலிம்பிக் 1896 இல் கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டு, பனாதெனிக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 14 நாடுகளை சேர்ந்த 241 விளையாட்டு வீரர்கள் 43 போட்டிகளில் கலந்து கொண்டனர். பின்னர் 1900 இல் நடைபெற்ற இரண்டாவது ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றது.

சர்வதேச ஒலிம்பிக் தினம்: 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினம், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களால் கொண்டாடப்படுகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 23 ஜூன் 1894 இல் நிறுவப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் பிறந்த பாரிஸில் உள்ள சோர்போனில் முதல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது.

ALSO READ: Indian Olympic History: ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் எப்போது..? இதுவரை ​​எத்தனை பதக்கங்கள்? முழு விவரம்!

Latest News