5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SA 2nd T20 Match Preview: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி இன்று.. பிட்ச், வானிலை எப்படி இருக்கும்?

IND vs SA 2nd T20: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நடைபெறும் செயிண்ட் ஜார்ஜியாவின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் பவுன்ஸர் அதிகமாக இருக்கலாம். இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரான 180 ரன்கள் கைப்ராவில் பதிவு செய்யப்பட்டது.

IND vs SA 2nd T20 Match Preview: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி இன்று.. பிட்ச், வானிலை எப்படி இருக்கும்?
இந்தியா – தென்னாப்பிரிக்கா (Image: twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 10 Nov 2024 11:32 AM

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2வது போட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி கெபெஹாராவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தின் அடிப்படையில், டர்பனில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியின் மீது பதிந்துள்ளது.

ALSO READ: தென்னாப்பிரிக்காவில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதா? கடும் கோபத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி எப்போது..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு கைப்ராவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு போடப்படும். தென்னாப்பிரிக்காவில் இந்த போட்டி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

மழை பெய்யுமா..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது போட்டியின் நாளில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். அதேநேரத்தில், வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மழைக்கான வாய்ப்பு மிக குறைவு என்று கூறப்படுகிறது. எனவே, போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை.

பிட்ச் எப்படி..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நடைபெறும் செயிண்ட் ஜார்ஜியாவின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் பவுன்ஸர் அதிகமாக இருக்கலாம். இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரான 180 ரன்கள் கைப்ராவில் பதிவு செய்யப்பட்டது. எனினும், அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றது. இங்கு இதுவரை 4 டி20 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 2 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா இதுவரை இங்கு 4 போட்டிகளில் விளையாடி கடைசி 3ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரை இழந்தது. அதன்பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 தொடர்களில் விளையாடி ஒருமுறை கூட இழந்ததில்லை. இந்தியா 2 தொடர்கள் வென்ற நிலையில், 3 டி20 தொடர்கள் டிராவில் முடிந்தது. தற்போது இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே 10வது இருதரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையில் இதுவரை 9 இருதரப்பு டி20 தொடர்கள் விளையாடப்பட்டுள்ளது. இதில், இந்தியா அதிகபட்சமாக 4 டி20 தொடர்களிலும், தென்னாப்பிரிக்கா 2 டி20 தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரை Sports18 தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம். அதேநேரத்தில், மொபைல் போன்களில் பார்க்க விரும்புவோர் ஜியோ சினிமா ஆப்பில் நேரலையில் இலவசமாக பார்க்கலாம்.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்! யார் அந்த இந்திய வீரர்..?

டி20 தொடருக்கான இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், விஜய்குமார். வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

தென்னாப்பிரிக்கா அணி:

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லர், மிஹாலலி ம்பொங்வானா, ரியான் லூபா பீட்டர், ரியான் லூபா பீட்டர் சிபம்லா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Latest News