Olympics Wrestling: உடல் எடை.. சுற்றுகள்.. மல்யுத்தம் போட்டியில் விதிமுறை என்ன?
Vinesh Phogat: இன்று நடைபெறவிருந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் எடை அவரது எடை பிரிவை விட சற்று அதிகமாக இருந்ததால், வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட கிடைக்காது. இதையடுத்து இந்த செய்திகுறிப்பில் எதனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை இங்கே பார்க்கலாம்.
வினேஷ் போகத்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் கொண்டு வர வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நிறைவேறாத கனவாக அமைந்தது. இன்று நடைபெறவிருந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் எடை அவரது எடை பிரிவை விட சற்று அதிகமாக இருந்ததால், வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட கிடைக்காது. இதையடுத்து இந்த செய்திகுறிப்பில் எதனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்..? ஒலிம்பிக் விதிகள் கூறுவது என்ன..? உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
எதனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்..?
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்தியர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டிக்கு முன்பு வினேஷ் போகத்தின் எடை 50 கிலோ 100 கிராம் இருந்ததாக கூறப்படுகிறது. வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடை பிரிவில் விளையாடியதால், எடை அதிகமாக இருந்த காரணத்தினால் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார். நேற்று இரவில் வினேஷ் போகத் எடையை சோதனை செய்தபோது 52 கிலோ என இருந்ததாகவும், அதன்பிறகு வினேஷ் இரவு முழுவதும் தூங்காமல் தனது எடையை குறைக்க முயன்று 2 கிலோ வரை குறைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இறுதி போட்டிக்கு முன்பு வினேஷ் போகத் மீண்டும் எடை போட்டு பார்த்தபோது, அது 50 கிலோவுக்கு அதிகமாக இருந்துள்ளார். அதிகம் இருந்த 100 கிராம் எடை காரணமாக, ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதி எடைக்கு பின்னர் 100 கிராம் எடையை குறைக்கும் வகையில், மேலும் சிறிது கால அவகாசம் வழங்குமாறு இந்திய நிர்வாகிகள் கோரியதாகவும், ஆனால் ஒலிம்பிக் நிர்வாகம் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஒலிம்பிக் விதிகள் சொல்வது என்ன..?
மல்யுத்த வீரர்களின் எடைப் பிரிவு தொடர்பான விதி என்ன, எதன் காரணமாக மகளிர் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு வந்த வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற கேள்விக்கு, மல்யுத்த விதிகளின்படி, எந்தவொரு மல்யுத்த வீரரும், வீராங்கனையும் போட்டி நடைபெறும் நாளுக்கு முன்பும், போட்டி நாளிலும் தனது எடை பிரிவுக்குள் இருக்க வேண்டும். அதன்படி, வினேஷ் போதக் 50 கிலோ எடைக்குள் தனது எடையை பராமரித்து கொண்டிருக்க வேண்டும். அதை விட 100 கிராம் அதிகரித்த காரணத்தினாலே வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா..?
மாலையில் மல்யுத்தப் போட்டி நடத்தப்பட்டால், போட்டி நடைபெறும் நாளில் காலையில் மல்யுத்த வீரர்களில் எடை சோதனை செய்து பார்க்கப்படும். அதன்படி, வினேஷ் போகத்தின் எடை இன்று காலை செய்தபோது அது 100 கிராம் அதிகமாக இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படாது. அதன்படி, பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் மற்றும் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே பதக்கம் வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்றவர் பட்டியல் காலியாக அறிவிக்கப்படும்.